32 C
Colombo
Saturday, March 15, 2025
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe
Home Blog Page 5735

வெளியிலிருந்து முல்லை வருபவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவர் – மாவட்ட செயலர் விமலநாதன்

0

வெளிமாவட்டங்களிலிருந்து முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருபவர்கள், 14 நாட்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என மாவட்ட செயலர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் நேற்று இடம்பெற்ற கொரோனாத் தொற்று அவசர நிலை தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்பவர்களும் இதே நிலை காணப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

‘மணி’ ஆதரவு உறுப்பினர்களின் பதவிகளைப் பறிக்கிறது முன்னணி!

0

உள்ளூராட்சி சபைகளின் நான்கு உறுப்பினர்களை பதவியில் இருந்து நீக்குமாறு, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சி யாழ். மாவட்ட உதவி தெரிவத்தாட்சி அதிகாரிக்கு அறிவித்துள்ளது.

யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர்களான தர்ஷிபா, டென்சி ஆகியோரும், சாவகச்சேரி பிரதேச சபைஉறுப்பினர்களான நிதர்சன், சிவகுமார் கஜன் ஆகிய நால்வருமே, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

எனவே இவர்களை சபைகளின் உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்குமாறு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினால் யாழ். மாவட்ட உதவி தெரிவத்தாட்சி அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

0

ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இப் பிரதேசங்களில் சில இடங்களில், குறிப்பாக ஊவா மாகாணத்திலும் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

‘பொறுப்பு வாய்ந்தவர்களின் பொறுப்பு’

0

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கும் கூற்று ஒன்றை, உண்மைகளை ஆராயும் தளம் (FactCheck) கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றது. விக்கினேஸ்வரன் கூறியது என்ன? நாடாளவிய ரீதியில் வேலையற்றவர்களின் விகிதம் 6மூ விகிதத்திற்கும் குறைவாக இருக்கின்ற நிலையில், போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கில் வேலையற்றவர்களின் விகிதம் 10மூ தாண்டிவிட்டது என விக்கினேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார். இந்தக் கூற்றை மேற்கோள் காட்டி, கொழுழ்பிலிருந்து வெளிவரும் ஆங்கில ஊடகமொன்று விக்கினேஸ்வரன் பிழையான தகவல்களை வெளியிடுவதாக குறிப்பிட்டிருக்கின்றது.

இலங்கையின் புள்ளிவிபரங்களின் படி, வேலையற்றவர்களின் விகிதம் எங்குமே 10 விகிதத்தை தாண்டவில்லை. வடக்கு கிழக்கை பொறுத்தவரையில் மட்டக்களப்பு மாவட்டமே, வேலையற்றவர்களின் எண்ணிக்கை அதிகமுள்ள மாவட்டமாகும். மட்டக்களப்பின் வேலையற்றவர்களின் விகதம் 7.2மூ. இதற்கு அடுத்தது அம்பாறை மாவட்டமாகும். அங்கு 6.9மூ. அதற்கடுத்ததுதான் யாழ்ப்பாணம். அங்கு 6.0மூ முழு இலங்கையையும் பொறுத்தவரையில், மாத்தறைதான் வேலையற்றவர்கள் அதிகமுள்ள மாவட்டமாகும். அங்கு மொத்த சனத்தொகையில் 7.5மூ வேலையற்றவர்களாக இருக்கின்றனர். அதற்கடுத்த மாவட்டமாக மாத்தளை இருக்கின்றது. அங்கு 7.4மூ. அதற்கடுத்தது அம்பாந்தோட்டை. அங்கு 7.3மூ ஆகும். இந்த தகவலை காண்பித்தே குறித்த ஊடகம் விக்கினேஸ்வரனின் அறிக்கையை உண்மைக்கு மாறானது என குறிப்பிட்டிருக்கின்றது. குறித்த குயஉவஊhநஉம ஒரு வேளை அரசாங்கத்தினால் நடத்தப்படுமாக இருந்தால், இது அரசின் திட்டமிட்ட பிரச்சாரம் என்று ஒதுக்கிவிடலாம் ஆனால் குறித்த தளம் வெரிட்டே ஆய்வு (ஏநசவைé சுநளநயசஉh) – என்னும் அரசுசாரா நிறுவனத்தினால் நடத்தப்பட்டுவருகின்றது. அரசியல்வாதிகளின் அறிக்கைகளிலுள்ள உண்மைகளையும் பொய்களையும் ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்துவதே இந்தத் தளத்தின் பிரதான பணியாக இருக்கின்றது.

விக்கினேஸ்வரன் வடக்கு மாகாண சபையில் முதலமைச்சராக இருக்கின்ற போது இனப்படுகொலை தீர்மானத்தை நிறைவேற்றியவர். அதே வேளை தமிழ் மக்களுக்கான நீதி தொடர்பில் உறுதியாக குரல் கொடுத்துவருபவர். இவ்வாறானதொரு பொறுப்பு வாய்ந்தவர் போதிய ஆய்வுகள் இல்லாமல் தகவல்களை வெளியிடும் போது, விக்கினேஸ்வரன் பேசிவரும் ஏனைய விடயங்களை கூட, மற்றவர்கள் சந்தேகத்துடன் நோக்கும் நிலைமை உருவாகலாம். இது தமிழ் மக்களின் நீதி நோக்கிய பயணத்தில் பின்னடைவுகளையே ஏற்படுத்தும்.

தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் ஆய்வுகளுடன் தகவல்களை வெளியிடும் பழக்கம் மிகவும் குறைவாகவே இருக்கின்றது. தமிழர்களுக்கென சுயாதீனமான ஆய்வு நிறுவனங்கள் இல்லாமையே இதற்கான காரணமாகும். அப்படியான நிறுவனங்களை உருவாக்குவதில் அரசியல்வாதிகள் ஒரு போதும் அக்கறை எடுத்ததுமில்லை. இதன் காரணமாக அரசியல்வாதிகள் தங்களின் வாயில் அகப்படுவதையெல்லாம் பேசும் போக்கொன்று தமிழ் அரசியல் சூழலில் காணப்படுகின்றது. அரசியல்வாதிகள் புள்ளிவிபரங்கள் தொடர்பில் பேசும் போது முன்கூட்டிய ஆய்வுகள் அவசியம். இதற்கென ஆலோசனை வழங்கக் கூடிய அமைப்புக்களை வைத்திருப்பது அவசியம். தமிழ் பிரதிநிதிகள் இவ்வாறு போதிய ஆய்வுகள் இல்லாமல் தகவல்களை வெளியிடுவதானது, அவர்கள் கூறும் அனைத்து விடயங்களையுமே மற்றவர்கள் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலைமையை உருவாக்கிவிடலாம். எனவே அறிக்கைகளை வெளியிடும் போது பொறுப்பு வாய்ந்தவர்கள் பொறுப்பாக நடந்துகொள்வது அவசியம்.

-ஆசிரியர்

சிங்கப்பூர் உதவி

0

இலங்கையில் கொரோனா சிகிச்சை சேவையைப் பலப்படுத்தும் நோக்கில், நேற்று சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று, 80 மில்லியன் ரூபாய் பெறுமதியான 50 வென்டிலேட்டர்களை சுகாதார அமைச்சிடம் கையளித்துள்ளது.

சிங்கப்பூரின் டிம்செக் நிதியம் இந்த அன்பளிப்பை செய்துள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் இலங்கையின் மெட் டெக்னோலோஜி ஹோல்டிங்ஸ் தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் கபில கீதனகே இந்த வென்டிலேட்டர்களை கையளித்துள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் பொதுஜன பெரமுன கூட்டு கருத்தரங்கு

0

சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஒன்றிணைந்து பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்திருந்த கூட்டு கருத்தரங்கின் நோக்கம் அரசியல் மட்டத்தில் நிறுவன கட்டமைப்புக்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதே என்று விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, நிர்வாக அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் வகையிலான கூட்டு கருத்தரங்கு ஒன்றை சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து நடத்தியிருக்கிறது.

இணையவழியில் நடைபெற்ற இந்த கருத்தரங்கு இலங்கையில் உள்ள சீனத்தூதரகத்துடன் ஒன்றிணைந்து பொதுஜன பெரமுனவினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

அரசியலில் ஒவ்வொரு கட்டமைப்புக்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பினை மேம்படுத்துதல் மற்றும் மக்களுக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவது குறித்து ஆராய்தல் ஆகியவையே இந்த கூட்டு கருத்தரங்கின் முக்கிய நோக்கம் என்று சீனா தெரிவித்திருக்கிறது.

அதேவேளை இதுகுறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டிருக்கிறார்:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் சீனத்தூதரகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த நிர்வாக அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான கருத்தரங்கில் பங்குகொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியடைகின்றேன். அரசியல் மட்டத்திலும் மக்கள் மட்டத்திலும் நிறுவனக்கட்டமைப்புக்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும். எதிர்காலத்தில் இளைஞர்கள் இதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் இக்கூட்டு கருத்தரங்கில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் ஜீ.எல்.பீரிஸ், மகிந்த யாப்பா அபேவர்தன, நாமல் ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கமல் குணரட்ண- புதிய தளபதி சந்திப்பு!

0

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை நேற்று முன் தினம் சந்தித்தார்.

ஏயார் சீப் மர்ஷல் சுமங்கள டயஸ் சேவையிலிருந்து ஓய்வு பெற்றதையடுத்து ஏற்பட்ட விமானப் படைத் தளபதி வெற்றிடத்திற்கே எயார் மார்ஷல் பத்திரன நியமிக்கப்பட்டார். இவர் இலங்கை விமானப் படையின் 18வது தளபதி ஆவார்.

பாதுகாப்புச் செயலாளர் மற்றும் புதிய விமானப்படை தளபதி ஆகியோரின் இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. என்பதும் குறிப்பிடத்தக்கது

பாதுகாப்பாக இருப்போம்டிஜிட்டல் திட்டம் அறிமுகம்!

0

கொவிட் ஒழிப்புக்கு உதவுவதற்காக தகவல், தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிறுவனத்தின் வழிகாட்டலில் தயாரிக்கப்பட்ட “பாதுகாப்பாக இருப்போம்“ (Stay Safe) டிஜிடல் திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிமும் செய்து வைக்கப்பட்டது.

கொவிட் தொற்றாளர்களின் தொடர்புகளை கண்டறிதல், நோய்க்காவிகளின் சுழற்சி கொவிட் பரவுவதை தவிர்ப்பதில் முக்கிய சவாலாக உள்ளது. “பாதுகாப்பாக இருப்போம்“ டிஜிட்டல் திட்டம் இப்பிரச்சனைகளுக்கு தீர்வை வழங்குகின்றது.

ஜனாதிபதியின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் தினமும் சந்திக்கும் கொவிட் ஒழிப்பு விசேட செயலணி; ஒன்றுகூடிய போது தகவல், தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிறுவனத்தின் தலைவர் ஜயன்த டி சில்வாவினால் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

”பாதுகாப்பாக இருப்போம்“ (Stay Safe) குறியீட்டின் அடிப்படையில் அமைந்ததாகும். கொவிட் 19 தவிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினருக்கும், வர்த்தக, அரச துறை நிறுவனங்களுக்கும் அனைத்து மக்களுக்கும் இலகுவாக பயன்படுத்தக் கூடிய எளிய முறைமையில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

Staysafe.gov.lk என்ற இணையத்தளத்திற்கு சென்று அனைத்து நிறுவனங்களுக்கும் தனித்துவமான ஞசு குறியீட்டை பெற முடியும். எதிர்வரும் சனிக்கிழமை (07) முதல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

திறன்பேசிகளை பயன்படுத்தி எந்தவொரு நிறுவனத்திற்கும் பெயர், முகவரி, உரிமையாளரின் பெயர் மற்றும் தொலைபேசி இலக்கம் போன்ற தகவல்களை வழங்கி மிகவும் இலகுவாக ஞசு குறியீட்டை பெற்றுக்கொள்ள முடியும்.

திறன் பேசிகள் உள்ள, இல்லாத அனைவரையும் பதிவுசெய்து அவர்கள் சென்று வரும் அனைத்து இடங்களையும் அறிந்துகொள்ள முடியும். இது தொடர்பில் அனைத்து ஊடகங்களின் மூலமும் மக்களை தெளிவுபடுத்துவதற்கு தகவல், தொடர்பாடல் முகவர் நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கொவிட் ஒழிப்பு விசேட செயலணி மேல் மாகாணம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் கொரோனா பரவல் தொடர்பான தற்போதைய நிலைமையினை ஜனாதிபதிக்கு விளக்கியது.

மக்கள் பொறுப்புடன் செயற்படவேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார். ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் மட்டும் விடயங்களை கையாள முடியாது. மக்களின் இயல்பு வாழ்க்கை, நாட்டின் பொருளாதாரம் மற்றும் ஏனைய அனைத்து அம்சங்களையும் சமமாக கருத்திற் கொண்டு தெளிவுடன் தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வைரஸை ஒழிப்பதற்கு தீர்வை கண்டறியும் வரை நாட்டை முடக்கி வைக்க முடியாது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சுகாதார வழிகாட்டல்களை

பின்பற்றி அனைவரும் நாளாந்த செயற்பாடுகளை வழமை போன்று முன்னெடுக்க தயாராக வேண்டும் என்றும் குறிப்பிட்டார். வைரஸை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறும் ஜனாதிபதி பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்தார்.

அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சீ தொலவத்த, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரும் செயலணியின் உறுப்பினர்களும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

14 நாள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பியவர் வீதியில் விழுந்து மரணம்

0

புத்தளம் தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேர்விஸ் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் வீதியோரத்தில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் நிந்தனியைச் சேர்ந்த 55 வயது குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கெட்டிப்பொலவில், ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வந்த இந்த குடும்பஸ்தர் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு, நேற்று தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து இன்று வீட்டுக்கு வருகை தந்த நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, உயிரிழந்த நபர் கெட்டிப்பொலவில் 14 நாள்கள் சுயதனிமைப்படுத்தலை நிறைவு செய்துகொண்டமைக்கான சான்றிதழ் கெட்டிப்பொல சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தால் வழங்கப்பட்டுள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என புத்தளம் பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

உயிரிழந்த நபரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதனை முடிவுகள் கிடைத்தவுடன் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா சிகிச்சை நிலையமாக மாங்குளம் மருத்துவமனை மாற்றம்

0

வடக்கு மாகாணத்தில் நான்காவது கொரோனா சிகிச்சை நிலையமாக மாங்குளம் ஆதார மருத்துவமனையின் ஒரு பிரிவு மாற்றப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தால் இந்தப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

30 நோயாளர் கட்டில்களைக் கொண்ட கொரோனா சிகிச்சை நிலையமாக மாங்குளம் ஆதார மருத்துவமனையின் ஒரு பிரிவு மாற்றப்பட்டுள்ளது. இந்தப் பிரிவு இன்று முதல் இயங்க ஆரம்பித்துள்ளது என சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மருதங்கேணி பிரதேச மருத்துவமனை மற்றும் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியின் ஒரு பகுதி கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளன.

மருதங்கேணி மருத்துவமனையில் 50 நோயாளர் கட்டில்களைக் கொண்டதாக கொரோனா சிகிச்சை நிலையம் கடந்த மாத நடுப்பகுதியிலிருந்து இயங்கி வருகிறது.
அத்துடன் கோப்பாய் தேசிய கல்வியியற்
கல்லூரி வளாகத்தில் ஒரு பகுதி 350 கொரோனா நோயாளிகளைப் பராமரிக்கும் நிலையமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் கிருஷ்ணபுரம் பகுதியில் கொரோனா சிகிச்சை நிலையம் அமைக்கப்படுகிறது.
சுமார் கட்டில்களைக்; கொண்டதாக இந்த சிகிச்சை நிலையம் அமைக்கப்படுகிறது.
இந்நிலையில் வடக்கு மாகாணத்தில் நான்காவது கொரோனா சிகிச்சை நிலையமாக மாங்குளம் ஆதார மருத்துவமனையின் ஒரு பிரிவு மாற்றப்பட்டுள்ளது.

.