25 C
Colombo
Saturday, March 15, 2025
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe
Home Blog Page 5737

மக்களின் ஒன்றுகூடலை தடுக்க யாழ்.  வணிகர் கழகம் புதிய ஏற்பாடு!  

0

யாழ். நகரில் பொதுமக்கள் ஒன்று கூடுவதைத் தடுக்கும் நோக்கில் யாழ். வணிகர் கழகத்தின் ஏற்பாட்டில் வீடுகளிலிருந்து பொருள்களைக் கொள்வனவு செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என வணிகர் கழகத்தின் தலைவர்
இ.ஜெயசேகரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தவை வருமாறு:

நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுத் தாக்கம் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக வடமாகாணத்திலும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், யாழ். நகரத்துக்கு வரும் பொது மக்களை இயன்றளவு குறைக்குமாறு சகல தரப்பினரையும் கேட்டுக்கொள்கின்றோம்.

பேருந்து போக்குவரத்து தற்போது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் சில வேளைகளில் தொடர்ந்து இன்னும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படலாம். அதேநேரத்தில் யாழ். நகரத்திலுள்ள வர்த்தக நிலையங்கள் இயல்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. இருப்பினும் பொதுமக்களின் வருகையை இயன்றளவு குறைக்குமாறு நாங்கள் வர்த்தகர்களைக் கேட்டிருக்கின்றோம்.

அதேபோன்று, அதிகளவில் ஒன்று கூடாமலிருக்குமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கின்றோம். அத்தியாவசிய பொருள்கள், உணவுப் பண்டங்கள் மற்றும் உணவகங்களிலிருந்து உணவுகள் தேவைப்படும்போது பொதுமக்கள் வீடுகளிலிருந்து கடைகளுடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளமுடியும்.

தற்கால சூழ்நிலையில் இவ்வாறான செயல்பாட்டின் மூலம் நகரின் மத்தியில் மக்களின் ஒன்றுகூடலைத் தடுக்கும் முகமாக, யாழ். வணிகர் கழகத்தினரால் இந்த முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே பொது மக்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.

100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு

0

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தில் மற்றும் முல்லைதீவு மாவட்டத்தில் கடற்பகுதிகளில் காலை வேளையில் இடியுடன் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய, வட மத்திய, ஊவா, வடமேல், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணத்தின் சில பகுதிகளில் பனி மூட்டமான காலநிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு ஒப்படைப்பதை எதிர்த்து ஜனாதிபதிக்கு கடிதம்!

0

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவின் தனியார் நிறுவனத் திற்கு வழங்குவதை எதிர்த்து ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அனைத்து இலங்கை துறைமுக சேவைகள் பொது ஊழியர் சங்கம் சமர்ப்பித்த இந்த கடிதத்தில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இலங்கை துறைமுக அதிகாரசபையின் கீழ் பராமரிக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது வழங்கிய வாக்குறுதிகளை அரசாங் கம் இப்போது மறந்துவிட்டது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கந்தளாயில் வீதியை கடக்க முற்பட்ட ஒருவர் பலி!

0

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் துவிச்சக்கர வண்டியில் சென்ற ஒருவரை மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் துவிச்சக்கர வண்டியில் சென்ற நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் கந்தளாய் பேராற்றுவெளி பகுதியைச் சேர்ந்த முகம்மட் நஜீப் 52 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்துச் சம்பவம் நேற்றிரவு (04) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்தளாய் நகரிலிருந்து வீட்டுக்குச் துவிச்சக்கர வண்யில் சென்ற ஒருவரே வீதியியை கடக்க முற்பட்ட வேளையில் வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் கந்தளாய் தள வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு உறவினர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்து ஏற்படுத்தியவரை பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எதிர்வரும் 9 ஆம் திகதியின் பின்னர் மேல் மாகாணத்தை திறப்பதற்கான வாய்ப்பு!

0

எதிர்வரும் 9 ஆம் திகதியின் பின்னர் மேல் மாகாணத்தை திறப்பதற்கான வாய்ப்பு அதிகளவில் இருப்பதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று (05) காலை தனியார் தொலைகாகாட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

9 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு பின்னர் மேல் மாகாணத்தை திறப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு தொடர்ந்து இதனை முன்னெடுப்பதற்கான எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இம்முறை வைரஸ் ஆனது சுகாதார அமைச்சு கூறும் பிரகாரம் நாம் அணியும் முகக்கவசம் தவறுதலாக அணியப்பட்டால் கூட வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீக்க வேண்டுமாயின் அதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

டென்மார்க்கின் நீதி அமைச்சருக்கு கொரோனா: பிரதமர் உட்பட பல அமைச்சர்கள் சுயதனிமைப்படுத்தலில்!

0

டென்மார்க்கின் நீதி அமைச்சருக்கு வைரஸ் தொற்றியதை அடுத்து நாட்டின் பிரதமர் உட்பட அவரது அமைச்சரவையில் பெரும் பங்கினர் சுயதனிமைப்படுத்தலில் உள்ளனர்.
பிரதமர் உட்பட அமைச்சர்களுடன் நடத்திய சந்திப்பு ஒன்றின் பின்னரே நீதி அமைச்சருக்கு வைரஸ் தொற்றியமை கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு நோய் அறிகுறிகள் வெளிப்பட்டுள்ளன. இதனால் முன்னெச்சரிக்கையாக பிரதமரும் ஏனைய அமைச்சர்களும் தங்களைத் தனிமைப்படுத்திக் லவ் Frederiksen) அம்மையாருக்கு இதுவரை தொற்று அறிகுறிகள் ஏதும் இல்லை என்பதை அரசு உறுதிப்படுத்தி உள்ளது.
அவர் தொடர்ந்து பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளார்.அவர் தனது இல்லத்தில் தங்கியிருந்தவாறு அரசுக்கடமைகளைக் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான அமைச்சர்களும் பிரதமர்களும் தத்தமது கடமைகளில் இல்லாதநிலையில் நாட்டு நிர்வாகம் எவ்வாறு இயங்கப்போகின்றது என்ற கேள்வி அங்கு எழுந்துள்ளது.
20 பேர் கொண்ட அமைச்சரவையில் 13 பேர் தனிமைப்பட்டுள்ளனர். மிகுதி ஏழு பேருடன் அரச நிர்வாகத்தை எவ்வாறு முன்னெடுப்பது என்பது பற்றி பரிசீலிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
கொரோனா வைரஸின் முதல் கட்டத்தில் மிக குறைந்த பாதிப்புகளைச் சந்தித்த ஸ்கன்டிநேவியன் நாடு டென்மார்க். அங்கு இதுவரை 728 வைரஸ் உயிரிழப்புகளே பதிவாகி உள்ளன. எனினும் தற்சமயம் இரண்டாவது அலையில் அங்கு தொற்றுக்கள் வேகமாக அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரிசிக்கான கட்டுப்பாடு விலையை நிர்ணயம் செய்யும் வர்த்தமானி வெளியிடப்பட்டது!

0

அரிசிக்கான கட்டுப்பாடு விலையை நிர்ணயம் செய்யும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டரிசி கிலோ ஒன்றின் விலை 92 ரூபா, பச்சை சம்பா, சிவப்பு சம்பா அசிரி – 94 ரூபாவாகவும், பச்சை சிவப்பரிசி 89 ரூபா எனவும் அந்த வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பினாகா ஏவுகணை சோதனை வெற்றி

0

ஒடிசா மாநிலத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (டிஆர்டிஓ) பினாகா ஏவுகணை உருவாக்கப்பட்டது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட பினாகா ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

ஒடிசா மாநிலம் சண்டிப்பூர் ஏவுதளத்திலிருந்து சோதித்து பார்க்கப்பட்டது. மொத்தம் ஆறு பினாகா ராக்கெட் ஏவுகணைகள் சோதிக்கப்பட்டன. இதில் அனைத்து ராக்கெட் ஏவுகணைகளும் வெற்றிகரமாக குறிப்பிட்ட இலக்கை தாக்கி அழித்தன.

மேம்படுத்தப்பட்ட இந்த ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இதனை ராணுவத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.

தமிழகத்தில் தற்காலிக கொரோனா மருத்துவமனை

0

சென்னையில் படுக்கை வசதிகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்துதல் மையத்தை ஹர்ஷ் வர்தன் திறந்து வைத்தார்

சென்னையில் உள்ள நான்காவது காலாட்படை மையத்தில் 10 படுக்கை வசதிகளைக் கொண்ட தற்காலிக மருத்துவமனையும் தனிமைப்படுத்துதல் மையமும் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் காணொலிக் காட்சி வாயிலாக இன்று இவற்றைத் தொடங்கி வைத்தார்.

அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றமான சிஎஸ்ஐஆர் இந்த தற்காலிக மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்துதல் மையத்தை அமைத்துள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், “கோவிட்- 19 போன்ற சவாலான சூழ்நிலைகளிலும் புதுமையான தீர்வுகளைக் கண்டறியும் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றம்- கட்டமைப்புப் பொறியியல் ஆராய்ச்சி மையம் (சிஎஸ்ஐஆர்-எஸ்ஈஆர்சி) ஆகியவற்றின் விஞ்ஞானிகள், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்டோருக்கு தமது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

“சென்னையில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையின் நான்காவது காலாட்படை மையத்தில் இன்று புதிதாக தொடங்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவமனை பாதுகாப்பான மற்றும் சௌகரியமான சூழலில் மக்களுக்கு ஆரம்ப சுகாதார வசதிகளை வழங்குவதுடன் 20 ஆண்டுகள் வரை நிலைத்து நிற்கும் திறன் கொண்டது,” என்று அவர் கூறினார்.

நவீன, விரைவாக நிறுவக் கூடிய வகையில், பாதுகாப்பான, அனைத்து வானிலை மாற்றங்களுக்கும் ஏற்றவாறு, அவசரகால சூழ்நிலைகளிலும் பல்வேறு இடங்களுக்கு எளிதில் எடுத்துச் சென்று விரைவில் அமைக்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய அம்சங்களை இந்த மையங்கள் பெற்று இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எளிதில் மடக்கக் கூடியதும், ஒருவர் தமது தோளில் சுலபமாக சுமந்து சென்று மற்றொரு இடத்தில் எளிதில் நிறுவக்கூடிய வகையிலுமாக சிஎஸ்ஐஆர்-எஸ்ஈஆர்சி ஆராய்ச்சிக் கூடங்கள் இதனை வடிவமைத்து இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

மீண்டும் பயன்படுத்தக்கூடிய திறன் கொண்ட மருந்துகள், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், பரிசோதனைகள், சத்தான நீண்ட காலம் பயன்படுத்தக் கூடிய துரித உணவுகள், எளிதில் வடிவமைக்கக்கூடிய கூரைகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற பல்வேறு புதுமையான தீர்வுகளை சிஎஸ்ஐஆர் கண்டறிந்து வருவதை அவர் பாராட்டினார்.

“விஞ்ஞானிகள், சுகாதாரப் பணியாளர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படைவீரர்கள் போன்றோரது அயராத உழைப்பினால் இந்தியாவில் இன்று கரோனா நோயிலிருந்து 92 சதவீதம் பேர் குணமடைந்து இருக்கிறார்கள்”, என்று அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சிஎஸ்ஐஆர்-இன் தலைமை இயக்குநர் டாக்டர் சேகர் சி மாண்டே, தேசிய பேரிடர் மீட்புப் படை தலைமை இயக்குநர் எஸ் என் பிரதன் ஆகியோரும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.

சிஎஸ்ஐஆர்-எஸ்ஈஆர்சி, சென்னை, தலைமை விஞ்ஞானி டாக்டர் பழனி, எஸ்ஈஆர்சி, சென்னை, இயக்குநர் பேராசிரியர் கபூரியா மற்றும் சிஎஸ்ஐஆர், தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் காணொலி வாயிலாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

புதுடெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தேசிய பேரிடர் மீட்புப் படை, சிஎஸ்ஐஆர்- எஸ்ஈஆர்சி-யின் ஒருங்கிணைப் போடு ரூபாய் 37.67 லட்சம் மதிப்பில் சென்னையில் இந்த தனிமைப்படுத்துதல் மையத்தை அமைத்துள்ளது. இதயத்துடிப்பை கண்காணிக்கும் கருவிகள், பிராணவாயு வழங்கும் சிலிண்டர்கள், இதயத்துடிப்பு மற்றும் ரத்த அளவை கணக்கிடும் கருவிகள் போன்றவை அரக்கோணத்தில் உள்ள மையத்தில் இடம்பெற்றுள்ளன.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பேரிடர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு கோவிட்-19 நோயால் பாதிக்கப்படும் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களுக்கு ஓர் வரப்பிரசாதமாக இந்த மையங்கள் அமையும்.

இருமல் சத்தத்தை கொண்டு கொரோனா பாதிப்பை கண்டறிய முடியும்!!

0

ஒருவரது இருமல் சத்தத்தை மட்டுமே கொண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா, இல்லையா என்பதை கண்டறியும் மென்பொருளை அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய இந்த மென்பொருளை அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பு தொடர்பான ஆய்வுக்கட்டுரை, ‘ஐஇஇஇ ஜர்னல் ஆஃப் இன்ஜினியரிங் இன் மெடிசின் அண்ட் பயாலஜி’ என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

பரிசோதனையின் மூலம் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டவர்களிடத்தில் இந்த மென்பொருளை இயக்கி பார்த்தபோது, அது 98.5 சதவீதம் சரியான முடிவுகளையும், கொரோனா நோய்த்தொற்றுக்கான இருமல் தவிர்த்த வேறெந்த அறிகுறியும் இல்லாதவர்களை 100 சதவீதமும் சரியாக கண்டறிந்துள்ளது.

இந்த அலாக்ரிதம் எனப்படும் கணிப்பொறி நிரலாக்கத்தை அனைவரும் பயன்படுத்தத்தக்க வகையிலான திறன்பேசி செயலியாக வெளியிட கட்டுப்பாட்டு அமைப்புகளின் ஒப்புதலை ஆராய்ச்சியாளர்கள் பெற வேண்டியுள்ளது.

அறிகுறியற்ற கொரோனா நோயாளிகளின் இருமலின் ஒலியின் முக்கியமான வேறுபாட்டை மனித காதுகளால் கேட்க முடியாது என்றும் அதை தங்களது தொழில்நுட்ப கண்டுபிடிப்பு சாத்தியமாக்கி உள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆராய்ச்சிக்குழுவை சேர்ந்த விஞ்ஞானிகளில் ஒருவரான பிரையன் சுபிரானா கூறியதாவது:-

உலகமெங்கும் பள்ளிகள்-கல்லூரிகள், பணியிடங்கள், போக்குவரத்து சேவைகள் உள்ளிட்டவை செயல்பாட்டுக்கு வருவதால், மாணவர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரை தினமும் பரிசோதனை செய்வதற்கு எங்களது கண்டுப்பிடிப்பு பயன்படும்.

மேலும், ஒரு குறிப்பிட்ட இடத்தில் கொரோனா வைரஸ் பரவலின் நிலையை கண்டறியவும் இது உதவக்கூடும் என கூறினார்.