27 C
Colombo
Saturday, March 15, 2025
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe
Home Blog Page 5739

பாராளுமன்ற பேரவையின் முதல் கூட்டம்

0

பாராளுமன்ற பேரவை சபாநாயகர் தலைமையில் இன்று முதல் தடவையாக கூடியது.

பிரதமர், எதிர்கட்சித் தலைவர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் கபீர் காசிம் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கையில் மேலும் 274 பேருக்கு கொரோனா

0

இலங்கையில் மேலும் 274 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அவர்களுடன் 267 பேர் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் 7 பேர் தனிமைப்படுத்தல் முகாம்களை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 12,018 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களுள் 5,858 பேர் இதுவரையில் பூரண குணமடைந்துள்ளதுடன் 6,097 பேர் தொடர்ந்து பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றாளரின் இறுதிக்கிரியையில் கலந்து கொண்டிருந்தவர்கள் தனிமைப்படுத்தலுக்கு

0

பாணந்துறை, பொன்சேகா பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருந்து தற்கொலை செய்துகொண்டிருந்த நபரின் இறுதிக் கிரியைகளில் பிரதேசவாசிகள் பலர் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் குறித்த பகுதியை சேர்ந்த 50 குடும்பத்திற்கும் மேற்பட்டவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு குறித்த பகுதி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார மேம்பாட்டுக்கான குழுக்களை வினை திறனாக செயற்படுத்த வட மாகாண covid-19 செயலணி தீர்மானம்!

0

தற்போதுள்ள Covid 19 தொற்று நிலைமையினை தவிர்ப்பதற்கு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சுகாதார மேம்பாட்டுக்கான கிராம மட்ட குழு அதே போல பிரதேச மட்ட குழுக்களை வினை திறனாக செயற்படுத்த   இன்றைய வடக்கு மாகாண covid19 செயலணி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்

வடமாகாண கொரோனா செயலணி கூட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வடக்கு மாகாண covid19 செயலணி கூட்டம் கௌரவ ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் வடக்கு மாகாண cocid19 பற்றி ஆராயப்பட்டதோடு மாவட்ட நிலைமைகள் பற்றியும் ஆராயப்பட்டது. அத்துடன் அத்தியாவசிய உணவு பொருட்களின் இருப்பு, அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான போக்குவரத்து விநியோகம் மற்றும் டெங்கு கட்டுப்படுத்தல் நிலவரங்கள் அதேபோன்று எதிர்வரும் மழைகாலத்தில் மாவட்டரீதியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டது. 

அதேபோன்று விவசாயம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தும் போது உள்ள இடர்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது. இந்த வகையிலே யாழ் மாவட்டத்தைப் பொறுத்த வரைக்கும்  இன்றைய நிலையில் 800 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். தற்பொழுது  யாழ் மாவட்டத்தில்  கொரோனா தோற்றால் பாதித்தோர் 16 ஆக உயர்ந்திருக்கிறது. 

இந்த நிலையில் மிகவும் விழிப்பாக  covid  19 தொடர்பான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மிகவும் உன்னிப்பாக எடுக்க வேண்டிய காலகட்டமாகவுள்ளது. அண்மையில் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுகாதார வர்த்தமானி அறிவித்தல்களை சுகாதார வழிகாட்டல்களை நடைமுறைப்படுத்தவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

 அதேபோல தற்பொழுது விழிப்புணர்வுகளை பலதரப்பட்ட மட்டங்களிலும் எடுக்க வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒவ்வொரு குழுவாக அதாவது வியாபாரிகளுக்கு தனியாக மற்றும் அங்காடி வர்த்தகர்கள் மற்றும் கல்வி நடவடிக்கைகளுடன் ஈடுபாடு கொண்டவர்கள், தமது நாளாந்த செயற்பாடுகளில் ஈடுபடுவதை இலக்கு வைத்து குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் விழிப்புணர்வு நடவடிக்கைகள்  மேற்கொண்டாலும் அதனைப் பின்பற்றுவது மிகவும் குறைவாக காணப்படுகின்றது. எனவே ஒவ்வொரு குழுவாக  செயற்படுத்துவதன் மூலம் அதனை மக்கள் மத்தியில் தெளிவடைய வைக்க முடியும். அதே போல் மாணவர்கள் ஊடாக அல்லது பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஊடாக இந்த நடவடிக்கையினை மேற்கொள்வதாக ஆராயப்பட்டது. 

Covid 19 நிலைமையை தவிர்க்கும் பொருட்டு ஏற்கனவே கிராம மட்ட குழு அதே போன்று பிரதேச மட்ட குழு மாவட்ட மட்டகுழுக்களை அமைத்திருக்கின்றோம். அதனுடைய செயற்பாடுகளை துரிதப்படுத்தி அவற்றை வினைத்திறனாக செயல்படுத்தும்படி இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. 
அதனடிப்படையில் யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரையும் அந்த குழுக்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த குழு சுகாதார வழிகாட்டலினை கொரோனா தடுப்பு வழிகாட்டல்களை பின்பற்றி செயற்பட வேண்டுமெனகோரப்பட்டுள்ளது. 
தேவையற்ற ஒன்று கூடுகளை தவிர்த்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. ஒன்று கூடுவதாகவிருந்தால் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சுகாதார பிரிவினரின் அனுமதியுடன் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. 

பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் போன்றவற்றில் அவர்களுடைய வாகன இலக்கத்தினை வாகனத்தில் உட்புறத்தில் காட்சி படுத்தி அதனை மக்கள் புரிந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல வாடகை வாகன சாரதிகள் தாங்கள்  பயணிகளை ஏற்றிச்சென்ற விவரங்களை தாங்கள் பெற்று வைத்திருத்தல் அவசியமானது. 

அதேபோல உணவகங்களில் எடுத்துச் சென்று உண்ணுதல் செயற்பாடு தொடர்பில் சுகாதார நடைமுறை சட்டத்தினை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரை தற்போது தொற்று 16 ஆக உயர்வடைந்துள்ளது. 

யாழ்ப்பாணத்தில் முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களாக கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் ராஜ கிராமம் மற்றும் யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவில் குரு நகர் திருநகர் பகுதிகள் காணப்படுகின்றன.

புங்குடுதீவு ஏற்கனவே முடக்கப்பட்டு தற்பொழுது நீக்கப்பட்டுள்ளது. சுமார் 800 குடும்பங்கள் அளவில் தற்பொழுது சுய தனிமைப்படுத்தியுள்ளோம். இந்த நடவடிக்கைகளை சுகாதாரப் பகுதியினர் மிகவும் உன்னிப்பாக கண்காணித்து ஆய்வு செய்து வருகிறார்கள்.

மேலும் இடர் கால நிவாரணமாக இரண்டு வாரங்களுக்கான நிவாரண உணவு பொதிகள் வழங்குவதற்கு அரச நிதியிலிருந்து முதற்கட்டமாக 7 மில்லியன் ரூபாய் கிடைத்திருக்கின்றது. அதனை விநியோகிக்கும் நடவடிக்கைகளை இன்றிலிருந்து  எடுத்துள்ளோம். அந்த வகையிலே பிரதேச செயலர்கள் அந்த விவரங்களை திரட்டி அதனை வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
அதனைவிட மாவட்ட செயலகத்தில் தகவல் தொடர்பு மையம் ஒன்றை ஏற்படுத்தியிருக்கின்றோம். இங்கு முப்படை சார்ந்தவர்களும் அனர்த்த முகாமைத்துவ குழுவினரும் இணைந்த வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன அவர்களுடைய தொடர்பு இலக்கங்கள் 021 211 7117 இந்த இலக்கங்களை தொடர்பு கொள்வதன் மூலம் பொதுமக்கள் தங்களுடைய குவித்தது தொடர்பான சந்தேகங்கள் மற்றும் மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள முடியும்
வெளிமாவட்டங்களுக்கான பயணங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனினும்  மக்கள் வெளி மாவட்டத்திற்கு செல்லக்கூடிய இயல்பு நிலை காணப்படுகின்றது சற்று மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது எனினும் மேல் மாகாணத்தை பொறுத்தவரையில்  கட்டுப்படுத்தப்பட்டுள்ளது
 ஆனால் வடமாகாணத்திற்குள்ளே அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட நிலை காணப்படுகின்றது எனினும் அத்தியாவசிய பொருட் போக்குவரத்துக்கள் வழமைபோன்று இடம்பெறுகின்றன இருந்தபோதிலும் மேல்  மாகாணத்திற்கான போக்குவரத்தில் ஏதாவது தடங்கல் ஏற்படுமானால் அதனை நிவர்த்தி செய்வதற்குரிய  ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது  
மேலும்மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பிரஜையும் தங்களுக்குரிய பொறுப்பினை உணர்ந்து அனுசரித்து செயற்படுவதன் மூலம் எமது மாவட்டத்தில் தொடர்ச்சியாக  தொற்றுஇல்லாத நிலைமையினைபாதுகாக்கலாம் எனவும் தெரிவித்தார்.

அமெரிக்க தேர்தலில் வெற்றிப் பெற்ற தமிழன்!

0

தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க ஜனநாயக கட்சியின் ராஜா கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்து மூன்றாவது முறையாக அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புதுடில்லியில் பிறந்த 47 வயதான கிருஷ்ணமூர்த்தி, லிபர்டேரியன் கட்சியின் பிரஸ்டன் நெல்சனை எளிதில் தோற்கடித்தார். கடைசி அறிக்கைகள் வந்தபோது, ​​அவர் கணக்கிடப்பட்ட மொத்த வாக்குகளில் கிட்டத்தட்ட 71 சதவீதத்தைப் பெற்றிருந்தார்.

ராஜா கிருஷ்ணமூர்த்தியின் பெற்றோர்கள் இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ராஜா கிருஷ்ணமூர்த்தி முதன்முதலில் 2016 ல் பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொழிற்சாலைகளில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களால் கொரோனா கொத்தணி அபாயம்

0

நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களால் பாரியளவில் கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம் இருப்பதாக அரசாங்க வைத்திய அதி காரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

அத்துடன், இன்றுவரை நாட்டில் பி.சி.ஆர் பரிசோதனை களில் தாமதம் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.

அவற்றை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் நாடு அபாயகரமான ஒரு நிலைக்குத் தள்ளப்படும் என அவர் எச்சரிக்கை விடுத் துள்ளார்.

இசுருபாய நாளை மீண்டும் திறப்பு!

0

இசுருபாய கட்டட அலுவலகத்தில் பணி புரியும் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து தற்காலிகமாக மூடப்பட்ட இசுருபாய நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்தார்.

கல்வி அமைச்சின் வளாகத்தில் உள்ள இராஜாங்க கல்வி சீர்திருத்த அமைச்சின் அதிகாரி ஒருவர் கொரோனா தொற்றாளராக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டார் .

இந்நிலையில், கல்வி அமைச்சின் இசுருபாய அலுவலக வளாகத்தை தொற்று நீக்கல் நடவடிக்கைகளுக்காக மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடிவிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

இதனையடுத்து, சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்கள் மற்றும் அவர்களின் உதவியால் குறித்த வளாகத்தில் தொற்று நீக்கல்  பணிகள் பூர்த்தியாகி விட்டன.

இந்நிலையில், நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

களுபோவில வைத்தியசாலையில் மேலும் இரு தாதியர்களுக்கு கொரோனா

0

கொழும்பு, களுபோவில போதனா வைத்தியசாலையில் மேலும் இரு தாதியர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த வைத்தியசாலையின் ஏழாவது விடுதியில் பணிபுரியும் இரு தாதியர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பொரளை பொலிஸ் நிலையத்தில் மேலும் 41 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா

0

பொரளை பொலிஸ் நிலையத்தில் மேலும் 41 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பொரளை பொலிஸ் நிலையத்தில் மேலும் 41 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றாளர்களாக இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டார்கள் என கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பொரளை பொலிஸ் நிலையத்தில் கொரோனா தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களின் ஒத்துழைப்பின்றி கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது- SDIG

0

வடமாகாணத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பின்றி கொரோனாதொற்றினை கட்டுப்படுத்த முடியாது என வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ன தெரிவித்தார்

 இன்றைய தினம் யாழ்ப்பாண நகரில்  பொலீசாரினால் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு செயற்பாட்டில் ஈடுபட்டனர் குறித்த விழிப்புணர்வு செயற்பாட்டில் ஈடுபட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

 தற்போது இலங்கையில் கொரோனா தொற்று அதிகளவில் பரவிவருகின்றது வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை நான் வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவியேற்ற பின் கொரோனா ஒழிப்பு தொடர்பில் போலீசாரால் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது 
அதன் ஒரு அங்கமாக இன்றையதினம் யாழ்ப்பாணக் குடாநாட்டில்மக்கள்  முக கவசம் அணிதல் தொடர்பான ஒரு விழிப்புணர்வு செயற்பாட்டினை மேற்கொண்டு வருகின்றோம்
வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரைக்கும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் அதாவது சுகாதார திணைக்களத்தினரின் சுகாதார நடைமுறைகளைகட்டாயமாக பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் 

அதாவது சமூக இடைவெளியானது மிகவும் முக்கியமான ஒன்றாகும் தற்போதைய சூழ்நிலையில் பொது மக்கள் ஒன்று கூடும் இடங்களில் கட்டாயமாக சமூக இடைவெளி பேணுதல் வேண்டும் 
அத்தோடு மக்கள் பெரும்பாலும் வீடுகளில் இருந்து தங்களுடைய கடமைகளைச் செய்வது மிகச் சாலச் சிறந்தது எனினும் வடக்கு மாகாணத்தில் குறித்த தொற்றினை கட்டுப்படுத்த வேண்டுமாக இருந்தால் பொதுமக்களின் ஒத்துழைப்புடனே அது சாத்தியமாகும் என தெரிவித்தார் அத்துடன் வீட்டை விட்டு வெளியில் வரும் போது கட்டாயமாக முக கவசம் அணிந்து வெளியில் வரவேண்டும் எனவும் வடக்கு மக்கள் தற்கால சூழ்நிலையில் தங்களையும் தங்களுடைய சமூகத்தினையும் பாதுகாக்க வேண்டியது அனைவரதும் பொறுப்பு எனவும் தெரிவித்தார்