28 C
Colombo
Friday, March 14, 2025
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe
Home Blog Page 5741

மேய்ச்சல் தரை விவகாரம்: ஆளுநர் எடுத்த தீர்மானம் ஏற்றுக் கொள்ள முடியாது!- கருணாகரன் MP

0

மட்டக்களப்பு மாவட்ட மயிலன்தனை மாதனை  மேய்ச்சல்
தரை விவகாரம் தொடர்பாக அமைச்சர் சமல்ராஜபக்ஷ தலைமையிலான குழு அமைத்து இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வைக் காண்பதற்காக உருவாக்கப்பட்ட குழுவையும் அமைச்சரையும்; அவமதித்து கிழக்கு மாகாண ஆளுநர் எடுத்திருக்கும் தீர்மானம் ஏற்றுக் கொள்ள முடியாது என அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கு சுட்டிக் காட்டியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கண்ணகிஅம்மன் ஆலய வீதியில் அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனின் காரியாலத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மாவட்டத்தில் மேய்ச்சல்
தரை பிரச்சனை பெரிய பிரச்சனை உருவெடுத்துள்ளதுடன் பேசும் பொருளாக மாற்றப்பட்டுள்ளது. ஏறாவூர்பற்று பிரதேச செயலப் பிரிவின் கீழ் உள்ள மயிலத்தனை மாதனை மேச்சல்தரை பிரதேசத்துக்குள் திட்டமிட்டு அயல் மாவட்ட சிங்கள மக்களை கொண்டுவந்து சேனைப் பயிர் செய்கை என்ற பேர்வையிலே ஒரு குடியேற்ற நிகழ்வை நிகழ்த்திக் கொள்வது வேதனைக்குரிய விடயமாகும்.

கடந்த 21 ம்திகதி ஒக்டோபர் மாதம் மகாவலி அபிவிருத்தி அமைச்சர் சமல் ராஜபக்ஷவை பாராளுமன்றத்திலே நானும் எனது சக பாராளுமன்ற உறுப்பினரும் சந்தித்து கலந்துரையாடலின் அடிப்படையில் 23 ம் திகதி சமல் ராஜபக்ஷவின் அலுவலகத்தில் வடக்கு கிழக்கைச் சோந்த கூடுதலான பாராளுமன்ற உறுப்பினர்களும். அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பொது ஜன பெரமுனை 3 பாராளுமன்ற உறுப்பினர்களும் பொலநறுவையைச் சேர்ந்த மகாவலி அதிகாரசபையின் இராஜாங்க அமைச்சர் சிறிபால சம்பத் மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் ,செயலாளர் உட்பட அதிகாரிகள் கலந்துரையாடியதன் நிமிர்த்தம் இந்த மயிலத்தனை மேச்சல் தரை பிரச்சனைக்கு தீர்வு காணப்படமுடியாத இடத்தில் இந்த மாதம் 2ம் திகதி வெலிகந்தை மகாவலி காரியாலயத்தில் காலை 9 மணிக்கு கூட்டம் நடாத்துவதாகவும் அந்த குழுவிலே 4 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் அம்பாறையில் 3 பொதுஜன பொரமுனை உறுப்பினர்களும் பொலநறுவை மாவட்டத்தில் இராஜங்க அமைச்சர் சிறிபால சம்பத், அம்பாறை மட்டக்களப்பு அரசாங்க அதிபர்கள் மற்றும் ஏறாவூர்பற்று கிரான் பிரதேச செயலாளர்கள் மகாவலி அதிகாரசபை பணிப்பாளர் உட்பட ஒரு குழுவை அமைத்து பிரச்சனைக்குரிய மயிலத்தனை மடு பிரதேசங்களுக்கு நேரடியாக சென்று அந்த குழு ஒரு தீர்கமான முடிவை எடுக்கவேண்டும் என்ற ரீதியிலே அமைச்சர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

அந்த வகையில் நாட்டில் நடைபெறும் அசாதாரண சூழ்நிலையில் நேற்று முன்தினம் 2ம் திகதி வெலிகந்தையில் நடைபெற இருந்த கூட்டம் தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளது என அறிய கிடைத்தது. இருந்தும் கடந்த மாதம் 29ம் திகதி வியாழக்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் சம்மந்தப்பட்ட பிரதேசங்களுக்கு விஜயம் செய்து அதன் பின்னர் 30ம் திகதி ஊடகங்களுக்கு 500 ஏக்கர் நிலத்தை சேனைப்பயிர் செய்கைக்காக கொடுக்க இருப்பதாக தெரிவித்திருந்தார்.

சம்மந்தபட்ட அமைச்சுக்கு பொறுப்பான அமைச்சரின் தலைமையிலே நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு முரனாக அமைச்சரினால் ஏற்படுத்தப்பட்ட குழு 2ம் திகதி கூடுவதற்கு முன்னதாக கிழக்கு மாகாண ஆளுறர் தன்னிச்சையாக அப்படி ஒரு தீர்மானத்தை எடுத்திருப்பதானது வேதனைக்குரிய விடயம்.

ஒரே நாடு ஒரே சட்டம் என ஜனாதிபதி கூறியிருக்கும் இந்த வேளையில் சம்மந்தப்பட்ட அமைச்சரினால் கூட்டப்பட கூட்டத்தையும் அவரினால் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வைக் காண்பதற்காக உருவாக்கப்பட்ட அந்த குழுவையும் உதாசீனம் செய்து அமைச்சரையும் அந்த குழுவையும் அவமதித்து ஆளுநர் எடுத்திருக்கும் தீர்மானம் ஏற்றுக் கொள்ள முடியாது.

அந்த அடிப்படையில் நேற்று உடனடியாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ ,இராஜாங்க அமைச்சர் சிறிபால சம்பத், மகாவலி அதிகாரசபை ஜெனரல் ஆகியோருக்கு இந்த பிரச்சனைக்கு சம்மந்தப்பட் அமைச்சார் சமல் ராஜபக்ஷ தலையிட்டு அவரினால் உருவாக்கப்பட குழு மீண்டும் கூடி ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கும்வரை அந்த பிரதேசத்தில் நடைபெறும் சேனைப்பயிர் செய்கையை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு நான் வேண்டி கடிதங்கள் அனுப்பியுள்ளேன். எனவே அமைச்சர் சமல் ராஜபக்ஷ முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கின்றது என்றார்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் உலக வங்கி உதவி!

0

கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை உலக வங்கி பாராட்டியுள்ளது.

அந்த வங்கியின் மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான வதிவிடப் பணிப்பாளர் பாரிஸ் ஹேய்டட் சர்வோஸ் நேற்று மாலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இலங்கையும் – உலக வங்கியும் பல வருடங்களாக பரஸ்பர நம்பிக்கையுடன் செயற்பட்டு வருவதாக சர்வோஸ் சுட்டிக்காட்டினார். தற்போதைய தொற்றுப் பரவலை விரைவில் கட்டுப்படுத்த இலங்கையால் முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக உலக வங்கி உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யானை தாக்கியதில் ஒருவர் மரணம்

0

மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் மல்லாவி வீதியில் மாங்குளம் நகர் பகுதியில் இருந்து முதலாவது கிலோமீட்டர் பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தச்சு வேலைக்காக முல்லைத்தீவு மல்லாவி கொல்லவிளாங்குளம் பகுதியில் வருகை தந்து வேலை புரிந்து வந்த நிலையில் நேற்று (03) இரவு பத்து பதினைந்து மணி அளவில் தனது வேலையை நிறைவு செய்து வீட்டுக்கு திரும்புவதற்காக திரும்பி கொடிகாமம் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார்.

இவ்வாறு கொடிகாமம் நோக்கி செல்வதற்காக பயணத்தை ஆரம்பித்த நபர் மாங்குளம் நகர்ப்பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் அளவில் வருகை தந்த போது இரவு 10.30 மணியளவில் திடீரென வீதியை குறுக்கறுத்த யானையுடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த யானையானது மோட்டார் சைக்கிள் மீதும் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த நபர் மீதும் சரமாரியாக தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

இந்த தாக்குதலில் குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்ப இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 37 வயதுடைய 9 வது ஆண்பிள்ளை ஒருவரின் தந்தையாகிய செட்டியாவெளி, பெரிய நாவலடி, கொடிகாமம் யாழ்ப்பாணம் என்ற முகவரியைச் சேர்ந்த ஆனந்தராசா விஜியானந்தன் என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் உடலும் நேற்றிரவு மாங்குளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் குறித்த இடத்திற்குச் சென்றால் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முகக்கவசம் அணியாதவர்கள் கைது!

0

முகக்கவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவௌியை பெணாமல் செயற்பட்ட 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இன்று (04) காலை தெரண அருண நிகழச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் மேல் மாகாணத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 220 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில் இதுவரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 2200 பேர் கைது செய்யப்பட்டு 340 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகர சபை உறுப்பினருக்கு கொரோனா தொற்று

0

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 30ஆம் திகதி மாநகரசபை உறுப்பினர்களுக்கான கூட்டம் கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.குறித்த கூட்டத்தில் மேற்படி தொற்றுக்குள்ளான உறுப்பினர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த உறுப்பினர் கொழும்பு வடக்கைச் சேர்ந்தவர் எனவும் அவர் தற்போது ஐ டி எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சற்று முன்னர் 24வது மரணம் பதிவானது!

0

கொரோனா வைரசினால் மற்றுமொரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியாசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 78 வயதை சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இதன் காரணமாக இலங்கையில் இதுவரை கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரி;த்துள்ளது.

மாந்தை பிரதேச செயலக உத்தியோகத்தர் இனந்தெரியாதவர்களால் படுகொலை!

0

மன்னார் மாந்தை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் விஜயேந்திரன் இனம் தெரியாதவர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மாலை அலுவலக பணி முடிந்து வீடு திரும்பிககொண்டிருந்த வேளை இனந்தெரியாதவர்கள் விஜயேந்திரனை கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாந்தை மேற்கில் இடம்பெற்ற சட்டவிரோத மண் அகழ்வு உட்பட் சமூகவிரோத செயல்களுக்கு எதிராக குரல்கொடுத்துவந்தவர் விஜயேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட செயலாளர்களுக்கு தீர்மானம் மேற்கொள்ளும் அதிகாரம்!

0

கொவிட்-19 தொற்று நாடு முழுவதும் பரவுவதை கட்டுப்படுத்தி, தத்தமது மாவட்டங்களை பாதுகாக்கும் பொருட்டு மேற்கொள்ளக்கூடிய உச்ச நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் பொருளாதார நிலை மற்றும் மக்களின் வாழ்க்கையை தொடர்ந்து சிறந்த நிலையில் பேணுவதற்கும் தேவையான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்ளுக்கு அதிகாரம் வழங்கப்படும்

கொவிட்-19 தொற்று நிலைமையை கட்டுப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை முடிந்தளவு உயர் மட்டத்தில் பேணுவதற்கும், மக்களின் வாழ்க்கையை நிலையான மட்டத்தில் பேணுவதற்கும் அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாகவும் அலரி மாளிகையில் (2020.11.02 மற்றும் 2020.11.03) தினங்களில் இடம்பெற்ற கலந்துரையாடல்களில் கலந்து கொண்டு பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் திரு.பசில் ராஜபக்ஷ அவர்கள் வலியுறுத்தினார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த திரு.பசில் ராஜபக்ஷ அவர்கள், உலகின் பிரதானமான நாடுகள் கொவிட்-19 தொற்று காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள சந்தர்ப்பத்திலும்கூட முழு நாட்டிற்கும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படாது மக்களின் தேவைகளை பூர்த்திசெய்து, பொருளாதார இலக்குகளை நிறைவேற்றிக்கொண்டு தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தேவையான தீர்மானங்களை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

அந்தந்த மாவட்டங்களின் தற்போதைய நிலைக்கு மத்தியில் ஏற்படும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதுடன் விசேடமாக விவசாயிகள் மற்றும் நுகர்வோர் பாதுகாக்கப்படும் வகையில் விவசாயத்துறையை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பது தொடர்பிலும் இதன்போது கவனத்திற் கொள்ளப்பட்டது. விவசாயத்துறைக்கு மேலதிகமாக மாவட்ட மட்டத்தில் சுகாதாரம், போக்குவரத்து, கடற்றொழில், தொழிற்சாலை நடவடிக்கைகளை மேற்கொள்ளல், நீர் மற்றும் மின்சார விநியோகம், கழிவு முகாமைத்துவம், எரிபொருள் வழங்கல் ஆகிய அத்தியவசிய செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் அரசாங்கம் முன்வைத்த அபிவிருத்தி திட்டங்கள் தடையின்றி செயற்படுத்தப்பட வேண்டும் என திரு.பசில் ராஜபக்ஷ அவர்கள் குறித்த கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டியதுடன், விவசாயம் மற்றும் பெருந்தோட்ட துறைகளின் உற்பத்தி செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்வதற்கு விவசாயிகளுக்கு சிறந்த தரத்திலான உரத்தை பெற்றுக் கொடுக்கும் செயற்பாட்டை தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் வலியுறுத்தப்பட்டது.

மேல் மாகாணத்தின் அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் நாளை முதல் சுகாதார பாதுகாப்புடன் திறக்கப்படும் எனவும் வெலிசர பொருளாதார மத்திய நிலையம் கிருமி நீக்கம் செய்யப்பட்டு அங்கு சேவையாற்றுவோருக்கு பி.சீ.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, எதிர்வரும் திங்கட்கிழமை அளவில்  மொத்த விற்பனைக்காக திறக்கப்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாகவும் குறித்த கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டது.

தொழிற்பேட்டைகளில் உள்ள அத்தியவசிய தொழிற்சாலைகளின் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நடவடிக்கையை கைத்தொழில் அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன் மேற்கொள்ள முடியும் என்றும், அந்த அனுமதி மற்றும் முதலீட்டு சபையின் அனுமதிபெற்ற கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு சபையின் அனுமதிபெற்ற தொழிற்துறைகளுக்கு முதலீட்டு சபை மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு சபையின் திறப்பதற்காக வழங்கப்பட்ட அனுமதிக்கான கடிதத்தை ஊரடங்கு உத்தரவு அனுமதியாக கருதி செயற்படுமாறு திரு.பசில் ராஜபக்ஷ அவர்கள் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தினார்.

சில பிரதேசங்களில் நடமாடும் மீன் விற்பனை நிலையங்களை மூடுவது தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் ஊடாக  தரம் உறுதிசெய்யப்பட்ட மீன்களை மக்களுக்கு விநியோகித்தல் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன் சமுர்த்தி பயனாளர்களுக்கு இம்முறை சமுர்த்தி கொடுப்பனவில் ரூபாய் 500 மதிப்புள்ள ஏற்றுமதி தரத்திலான பொதி செய்யப்பட்ட மீன்களை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலையீட்டுடன் பெற்றுக்கொடுப்பதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது. அதற்கான நிதி அமைச்சின் அனுமதியும் குறித்த கலந்துரையாடலின்போது பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஊடக பிரிவு

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 2193 பேர் கைது!

0

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச் சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 201பேர் கைது மற்றும் 31 வாகனங்களும் கைப் பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தல் ஊர டங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இதுவரை 2193 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 338 வாகனங் களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதேநேரம் ஒக்டோபர் 15 ஆம் திகதி முதல் முகக் கவசம் அணியத் தவறியமை மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுகளுக்காக இதுவரை 75 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித் துள்ளார்.

சிறைச்சாலை அதிகாரிகளால் தாக்கப்பட்ட கைதியே உயிரிழந்தார் -மொனராகல சிறையில் சம்பவம்!

0

மொனராகல சிறைச்சாலையில் சிறைச்சாலை அதிகாரிகளிற்கும் கைதியொருவருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக கைதியொருவர் உயிரிழந்துள்ளார்.
கைதியொருவர் சிறைச்சாலை அதிகாரியொருவரை கல்லால் தாக்கிய சம்பவத்தினை தொடர்ந்து இரு சிறைச்சாலை அதிகாரிகள் கைதியை தாக்கியதன் காரணமாக காயமடைந்த கைதி பின்னர் உயிரிழந்துள்ளார் என சிலோன் டுடே செய்திவெளியிட்டுள்ளது.

உயிரிழந்த கைதி அடைத்து வைக்கப்பட்டிருந்த பகுதிக்கு சிறைச்சாலை அதிகாரி சென்றவேளை தன்னை திறந்துவிடுவதை தாமதப்படுத்தியதற்காக சிறைக்கைதி சிறைச்சாலை அதிகாரியை ஏசியுள்ளார்.
இதன் காரணமாக இருவருக்கும் இடையி;ல் வாக்குவாதம் வலுத்தவேளை இரு சிறைக்கைதிகள் சேர்ந்து சிறைச்சாலை அதிகாரியை தாக்கியுள்ளனர்.
இதன் காரணமாக காயமடைந்த கைதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
கைதியால் தாக்கப்பட்ட சிறைச்சாலை அதிகாரியி;ன் கைஉடைந்துள்ளது அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை இந்த சம்பவம் குறித்து விசாரணைகளிற்கு உத்தரவிட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அம்பாறையை சேர்ந்த 42 வயது உபுல் நிசாந்த என்ற கைதியே உயிரிழந்துள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.