28 C
Colombo
Saturday, March 15, 2025
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe
Home Blog Page 5810

Proxone app இல் தற்போது பெருமளவு உடற்தகைமை மற்றும் பொழுதுபோக்கு உள்ளம்சங்கள் அடங்கியுள்ளன

0

கடந்த மாதம் உடற்தகைமை துறையில் புரட்சியை ஏற்படுத்திய வண்ணம் Power World gyms இனால் அறிமுகம் செய்யப்பட்ட Proxone app ஊடாக pay-as-you-go வசதி வழங்கப்படுவதுடன் இந்த Proxone app இல் தற்போது பெருமளவு உடற்தகைமை பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு உள்ளம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

´அனுபவத்துக்கான சுதந்திரம்´ எனும் கொள்கையை மீளமைக்கும் வகையில் அமைந்துள்ள இந்த Proxone app ஊடாக பாவனையாளர்களுக்கு தமது உடற்தகைமை இலக்குகளுக்கமைய ஒரு செயற்பாட்டுக்கு மட்டுப்படுத்தப்படாமல் காலம் மற்றும் இடம் என எவ்வித சிக்கல்கள் அல்லது வரையறைகளுமின்றி அவற்றை எய்தக்கூடியதாக அமைந்துள்ளது. எந்தவொரு நேரத்திலும் எந்தவொரு பகுதியிலிருந்தும் உடற்தகைமை செயற்பாட்டை அணுகுவதை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது.

Proxone ஊடாக தற்போது 150 க்கும் அதிகமான செயற்பாடுகளை அணுகும் வாய்ப்பு வழங்கப்படுகின்றது. இதில் ரக்பி விளையாட்டுகள் வெளியிட குத்துச்சண்டை வகுப்புகள் உயர் வினைத்திறன் பயிற்சி (HIT), Zumba, தெரிவு செய்யப்பட்ட குழுக்களுக்கு – பெண்களுக்கு மாத்திரம் உடற்தகைமை செயற்பாடுகள் சிரேஷ்ட பிரஜைகள் அடங்கியுள்ளன. குறிப்பாக நீச்சல் டெனிஸ் உதைப்பந்தாட்டம் பூப்பந்தாட்டம் ஸ்கொஷ் கூடைப்பந்தாட்ட மைதானம் மற்றும் உங்கள் இருப்பிடத்துக்கு அருகாமையில் அமைந்துள்ளன பல உடற் தகைமை செயற்பாடுகள் பல அடங்கியுள்ளன.

கொழும்பையும் அதனைச் சூழவுள்ள பகுதிகளையும் சேர்ந்த வெளியக செயற்பாடுகள் தினசரி மு.ப. 5.30 முதல் மு.ப. 7.00 மணி வரையும் மற்றும் பி.ப. 5.15 முதல் பி.ப. 6.45 வரையும் கிடைப்பதுடன், ஒரு வகுப்புக்கு தலா 250 ரூபாய் எனும் குறைந்த தொகை அறவிடப்படும். பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு தாம் விரும்பும் பயிற்றுவிப்பாளரை தெரிவு செய்து கொள்ள முடியும். இதற்காக Proxone App இல் தெரிவு செய்து கொள்ள ஏராளமான பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் வழிகாட்டிகளின் தகவல்கள் காணப்படுகின்றன.

பவர் வேர்ள்ட் ஜிம்ஸ் ஸ்தாபகரும் தவிசாளரும், Proxone, இன் தயாரிப்பாளருமான தலவு எஃவ் அலைலிமா கருத்துத் தெரிவிக்கையில் ´உடற்தகைமை ஆர்வலர்களுக்கு பெருமளவு தெரிவுகளை பெற்றுக் கொடுக்க முடிந்ததையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். துறையில் காணப்படும் பாரம்பரிய வழிமுறைகளை தகர்த்து இன்றைய கால கட்டத்துக்கு உகந்த புதிய வாழ்க்கை முறை தெரிவுகளை வழங்குவதில் நம்பிக்கை கொண்டுள்ளோம். Proxone என்பது பாவனையாளர்களுக்கு ஒப்பற்ற அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன்ரூபவ் அவர்களின் உடற்தகைமை இலக்குகளை எய்துவதற்கு உதவியாக அமைந்துள்ளது.´ என்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ´எமது பின்புல மற்றும் விநியோகத் தொடர் உட்கட்டமைப்பு வசதியை வலிமைப்படுத்தி விரிவாக்கம் செய்வது தொடர்பில் கவனம் செலுத்துவோம். அதனூடாக, தினசரி அதிகரித்துச் செல்லும் செயற்பாடுகள் மற்றும் விற்பனை நிலையங்களில் பின்பற்றப்படும் நடவடிக்கைகளையும் உள்வாங்கக்கூடியதாக இருக்கும்.´ என்றார். app என்பது உயர் மூலோபாயத் திட்டத்தை அடிப்படையில் அமைந்துள்ளது. குறிப்பாக வளர்ச்சி மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையிலுள்ளது. வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த நிபுணர் அணியினரால் Proxone அங்கத்தவர்களுக்கு பெருமளவு தெரிவுகளை Pay-As-You-Go அடிப்படையில் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 74 இலட்சத்தை தாண்டியது

0

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச் சத்தை அடைந்து­­­ வரும் நிலையில், இன்று இதுவரை இல் லாத அளவுக்கு அதிகபட்சமாக கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகியிருக்கிறது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் களின் எண் ணிக்கை 74 இலட்சத்தை தாண்டியது. 65.24 இலட்சம் பேர் குண மடைந் துள்ளதாக அந்நாட்டு ஊடகங் கள் தகவலை வெளியிட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. அதே சமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக் கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தக வலின்படி இந்தியாவில் மொத்த எண்ணிக்கை  74  இலட்சத்து 32 ஆயிரத்து 680 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 65 இலட்சத்து 24 ஆயி ரத்து 595 பேர் குணமடைந் துள்ளனர், 7 இலட்சத்து 95 ஆயிரத்து 087 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் மொத்த எண் ணிக்கை 1,12,998 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

சீனாவில் முஸ்லீம்களுக்குஎதிராக இனப்படுகொலைபோன்றநடவடிக்கைகள்- அமெரிக்காகுற்றச்சாட்டு

0

சீனாதனதுசின்சியாங் மாகாணத்தில் முஸ்லீம்களைகிட்டத்தட்ட இனப்படுகொலைசெய்கின்றதுஎனஅமெரிக்காவின் தேசியபாதுகாப்புஆலோசகர்ரொபேர்ட் ஓ பிரையன் தெரிவித்துள்ளார்.

அது இனப்படுகொலையில்லைஎன்றால் அதற்குசமமானஏதோவொன்றுசின்சியாங்கில் முஸ்லீம்களுக்கு இடம்பெறுகின்றதுஎனஅவர்குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்டமாநிலத்தில் மனிதர்களின் தலைமுடிகளில் இருந்துதயாரிக்கப்பட்டதலைமுடிதொடர்பானபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகஅவர்குறிப்பிட்டுள்ளார்.

சீனாஉய்குர் இனப்பெண்களின் தலைகளைமொட்டையடித்துதலைமுடிதொடர்பானபொருட்களைதயார் செய்துஅமெரிக்காவிற்குஅனுப்புகின்றதுஎனஅவர்குறிப்பிட்டுள்ளார்.
மனிததலைமுடியிலிருந்துதயாரிக்கப்பட்டபொருட்கள் அடங்கியகப்பலொன்றைகடந்த ஜூன் மாதம் கைப்பற்றியதாகஅமெரிக்காதெரிவித்திருந்ததுடன் அந்தபொருட்கள் மனிதர்களைகட்டாயப்படுத்திதயாரிக்கப்பட்டவைஎனவும் குறிப்பிட்டிருந்தது.

சீனஅரசாங்கம் உய்குர் இனத்தவர்களுக்கும் ஏனைய சிறுபான்மையினத்தவர்களுக்கும் எதிராகமுன்னெடுக்கின்றநடவடிக்கைகளைகண்டித்துவரும் அமெரிக்காசீனஅதிகாரிகளுக்குஎதிராகதடைகளையும் விதித்துள்ளது.
சின்ஜியாங்கில் சீனா முஸ்லீம்களுக்குஎதிராககட்டாயகருத்தடைகருக்கலைப்புமற்றும் குடும்பகட்டுப்பாடுபோன்றவற்றைமுன்னெடுக்கின்றதுஎனஅமெரிக்க இராஜாங்கசெயலாளர்தெரிவித்துள்ளார்.

சின்ஜியாங்கில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்களும் மனிதஉரிமைசெயற்பாட்டாளர்களும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்எனஐக்கியநாடுகள் குற்றம்சாட்டியுள்ளது.

நியுசிலாந்து பொதுத்தேர்தல்- ஜசின்டா ஆர்டெனின் கட்சி முன்னிலையில்

0

நியுசிலாந்தில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் பிரதமர் ஜசின்டாஆர்டெனின் தொழில்கட்சி வெளியாகியுள்ள ஆரம்ப கட்ட முடிவுகளின் அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.

ஜசின்டா ஆர்டெனின் மூன்றுவருட பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து இடம்பெற்ற பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியாகத்தொடங்கியுள்ளன.
இதுவரை தேர்தல் ஆணையகம் வெளியிட்டுள்ள முடிவுகளின் படி பிரதமரின் தொழில்கட்சி 50வீத வாக்குகளை பெற்றுள்ளது.எதிர்கட்சியான தேசிய கட்சிக்கு 25 வீத வாக்குகளை பெற்றுள்ளது.
கருத்துக்கணிப்புகள் பிரதமருக்கு சாதகமாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எனினும் பிரதமர் ஜசின்டா ஆர்டெனிற்கு பெரும்பான்மை கிடைக்குமா என்ற கேள்விகளும் நியுசிலாந்தில் காணப்படுகின்றன.

கொரோனா தொற்றுக்கு அரசாங்கத்தின் தவறே காரணம் – சஜித்

0

அரசாங்கத்தின் அலட்சியம் காரணமாக கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்பட்டது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித் துள்ளார்.

அரசியல் அதிகாரத்தை அரசாங்கம் கைவிட்டு மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவார ணம் வழங்கும் பணியில் ஈடுபடவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டி னார்.

தற்போது அரசாங்கம் 20வது திருத்தத்திற்கு முன்னுரிமை வழங்கியுள்ளது என்றும் கொரோனாவுடன் விளையாடுவதாகவும் அவர் தெரிவித்துள் ளார்.

தற்போதைய நாட்டின் நிலைமை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிடும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் இதனைத் தெரிவித்துள்ளார்.

7 உறுப்பினர் குழு; யாழில் கூடிய தமி ழ்க்கட்சிகள் முடிவு

0

தமிழ் மக்களுடைய நலன்களைப் பாதுகாப்பதற்காக தமிழ்க் கட்சிகள் எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படுவது என்பதையிட்டு ஆராய்வதற்காக ஏழு உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைப்பது என யாழ்ப்பாணத்தில் இன்று கூடிய தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளார்கள்.

தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இன்று காலை நடைபெற்ற 10 தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டத்தில், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் தமிழ் மக்களைப் பாதிக்கும் நடவடிக்கைகள் தொடர்பிலும், அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் ஆராயப்பட்டது.

இதன்போது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் சார்பில் உரையாற்றிய சுரேஷ் பிரேமச்சந்திரன், “தமிழ் மக்களுடைய நலன்களைப் பாதுகாக்கும் வகையில், தமிழ்க் கட்சிகள் எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படுவது என்பதையிட்டு ஆராய்வதற்காக குழு ஒன்றை அமைக்க வேண்டும்” என்ற யோசனையை முன்வைத்தார்.

இது தொடர்பாக உரையாற்றிய அவர் மேலும் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது;

“தமிழ் மக்களுக்குப் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இவற்றை நாம் ஒரு ஸ்தாபன ரீதியாகக் கையாளவேண்டுமானால், இந்தக் கட்சிகளின் கூட்டமைப்பை ஸ்தாபன ரீதியாக மாற்ற வேண்டும். அல்லது ஒவ்வொரு பிரச்சினைகள் வரும்போது அதற்கான செயற்பாடுகள் குறித்து முடிவெடுக்கப்போகின்றோமா இல்லை ஒரு அமைப்பு ரீதியாக அனைத்துப் பிரச்சினைகளையும் கையாளப் போகின்றோமா என்பது கவனிக்கப்படவேண்டும்.

இனநெருக்கடி உட்பட அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கியதாக நாம் செயற்பட வேண்டுமானால், ஒரு ஸ்தாபன ரீதியாக இந்தக் கூட்டணியை மாற்றிச் செயற்பட வேண்டும். இன்று இலங்கை அரசாங்கம் உள்ள நிலையில், அவ்வப்போது வரக்கூடிய பிரச்சினைகளை எதிர்கொள்வதுடன் நின்றுவிட முடியாது. எமது பிரச்சினை மிகப் பிரமாண்டமானதாக இருக்கின்றது.

அவ்வாறான நிலையில் அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுக்கும் வகையில் நாம் செயற்பட வேண்டியிருக்கின்றது. இதில் நாம் தனித்தனியாக நின்று எனையும் சாதிக்க முடியாது. இங்கு வந்திருக்கும் கட்சிகள் கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அணுகுமுறையில், அமைப்பு முறையில் தவறு இருப்பதாகக் கூறி வெளியேறிய கட்சிகள்தான் அதனால், மீண்டும் நாம் ஒரு அமைப்பாகச் செயற்படுவதாயின், பழைய தவறுகள் களையப்பட வேண்டும். ஒரு புதிய ஆரம்பம் அவசியம்” என வலியுறுத்தினார்.

சுரேஷ் பிரேமச்சந்திரனின் கருத்துக்குப் பெரும்பாலானவர்கள் ஆதரவு தெரிவித்தார்கள். அதனையடுத்து ஸ்தாபன மயப்படுத்தல், மற்றும் ஏனைய செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக ஏழு பேர் கொண்ட குழு ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. இந்தக் குழுவின் விபரம் இரண்டொரு தினங்களில் அறிவிக்கப்படும்.

இனறைய கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்களான எம்.ஏ.சுமந்திரன், சிறிதரன், கலயரசன் ஆகியோரும் கலந்துகெண்டிருந்தார்கள். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இதில் கலந்துகொள்ளவில்லை.

மட்டக்களப்பு அரசாங்க அதிபராக கே.கருணாகரன் கடமையைப் பொறுப்பேற்றார்

0

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை கருணாகரன் சனிக்கிழமை மாவட்ட செயலகத்தில் கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இலங்கை நிருவாக சேவை விசேடதர உத்தியோகத்தரான இவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி, வெல்லாவெளி, ஆரையம்பதி, வாழைச்சேனை மற்றும் வவுணதீவு பிரதேச செயலாளராக கடமையாற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராகவும், வீதி அபிவிருத்தி, காணி மற்றும் சமுக அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

கடந்த 14 ஆந்திகதி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக அமைச்சரவையினால் நியமனக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டதையடுத்தே இன்று சமயவழிபாட்டின் பின்னர் கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பிலுள்ள மதஸ்தலங்களுக்குச் சென்று ஆசிர்வாதத்தினையும் பெற்றுக் கொண்டார்.

இதன்போது அரசாங்க அதிபர் கருத்து வெளியிடுகையில் சவால்மிக்க பொறுப்புவாய்ந்த கடமையொன்றினை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்துள்ளது. இதனைத் திறம்பட மேற்கொள்ள அனைவரினதும் ஒத்துழைப்புகளை பெரிதும் எதிர்பார்கின்றேன். இம்மாவட்டத்திலுள்ள அனைத்து இனமக்களுக்கும் இனமத பேதமின்றி சேவை வழங்குவதுடன் கடந்த காலங்களைவிட குறைவில்லாமல் எமது பணி சிறப்பாக அமையும் எனத் தெரிவித்தார்.

இக்கடமைப் பொறுப்பேற்கும் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த், காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நவரூபரஞ்ஜினி முகுந்தன், உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன், பிரதம கணக்காளர் க.ஜெகதீஸ்வரன் மற்றும் மாவட்ட செயலக திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்களென பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

கடற்றொழில் – நீர் வேளாண்மை விருத்திக்கு இருதரப்பு ஒப்பந்தம்

0

இலங்கையில் கடற்றொழில் மற்றும் நீர் வேளாண்மையை விருத்தி செய்வது தொடர்பான இருதரப்பு ஒப்பந்தம் ஒன்றை இலங்கை – வியட்நாம் ஆகிய நாடுகளுக்கிடையில் மேற்கொள்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் பாம் தி பிஜ் நொகெக் (Pham Thi Bich Ngoc) ஆகியோருக்கிடையில் இன்று (17) மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போதே குறித்த விடயம் கலந்துரையாடப்பட்டது.

2021 – 2025 ஆம் ஆண்டு வரையான வேலைத் திட்டங்களை உள்ளடக்கிய இருதரப்பு ஒப்பந்தத்தில் கடலட்டை வளர்ப்பு தொடர்பான தொழில் நுட்ப உதவிகளைப் பெற்றுக் கொள்ளுதல் மற்றும் நன்னீர் மீன் வளர்ப்பு உட்பட நீர் வேளாண்மை தொடர்பான நவீன முறைகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வது போன்ற விடயங்களை உள்ளடக்குவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

மேலும், வியட்நாமில் இருந்து துறைசார் நிபுணர்களை வரவழைத்து இறால் வளர்ப்பு தொடர்பான பயிற்சிப் பட்டறைகளையும் நீர்வேளாண்மை விருத்தி தொடர்பான விஞ்ஞான ஆய்வுப் பட்டறைகளை நடத்துவது தொடர்பான விடயங்களையும் குறித்த இருதரப்பு ஒப்பந்தத்தில் உள்ளடக்குவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட இருதரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையிலான வேலைத் திட்டம் 2010 – 2013 ஆண்டு காலப் பகுதியில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளமையை அமைச்சர் சுட்டிக்காட்டியதுடன், கடந்த கால அனுபவங்களை கருத்தில் எடுத்து புதிய இருதரப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மோட்டார் சைக்கிளும் டிப்பர் வாகனமும் விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் பலி

0

மோட்டார் சைக்கிளும் டிப்பர் வாகனமும் விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன் சம்பவத்தில் கருனாரட்ணம் கருனானந்தன் (வயது36) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோப்பாய் சந்தியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த சாரதியை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

எனினும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் குறித்த குடும்பஸ்தர் உயர்ந்துள்ளார். தற்போது உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் பலி

0

போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவருடைய உறவினர்கள் நேற்று (16) ஹிக்கடுவ பொலிஸ் நிலையத்திற்கு முன்னாள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்டதை அடுத்து சுகவீனமுற்ற குறித்த பெண் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

ஹிக்கடுவ களுபே பகுதியை சேர்ந்த 52 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் கடந்த 13 அம் திகதி போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வந்த சந்தர்ப்பத்தில் திடீர் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவித்து அவரது உறவினர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.