27.5 C
Colombo
Saturday, July 12, 2025
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe
Home Blog Page 6

கன்னியா அத்துமீறிய கட்டிடப் பணி உடனயாக இடைநிறுத்தம்!

0

திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட காணியில் இடம்பெற்று வருகின்ற அத்துமீறிய கட்டிடப் பணி தொடர்பாக திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேச சபை தலைவர் வெள்ளைத்தம்பி சுரோஸ்குமாாரின் நேரடி ஆய்வின் பின்னர் கட்டிட பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட மூன்று ஏக்கர் காணியில் தொடர்பு இல்லாத சிலருடைய அத்துமீறிய கட்டிடப் பணி தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய தலைவர் வெள்ளை தம்பி சுரேஷ்குமார் உபதலைவர் வைரவநாதன் உட்பட சபையின் உத்தியோகத்தர்கள் அனைவரும் நேற்றைய தினம் புதன்கிழமை (09) அவ்விடத்திற்கு சென்று நிலைமையை ஆராய்ந்து கட்டிடப் பணியை உடனடியாக இடைநிறுத்தியுள்ளனமை குறிப்பிடத்தக்கது.

லொறி – முச்சக்கரவண்டி மோதி விபத்து – 2 பேர் காயம்!!

0

கண்டி- ஹேவாஹெட்ட பிரதான  வீதியில் தென்னேகும்புர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

ஹேவாஹெட் பகுதியில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

வீதியில் பயணித்த லொறியின் பின்புறத்தில் முச்சக்கரவண்டி ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் ஒருவரும் அதன் சாரதியுமே காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இருவரும் கண்டி தேசிய  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

தேசிய ஆராய்ச்சி முன்னுரிமைகளை அடையாளம் காண புதிய குழு!

0

இலங்கையில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், எமது  நாட்டில் முதல் முறையாக தேசிய ஆராய்ச்சித் தேவைகளைக் கண்டறிந்து முன்னுரிமை அளிப்பதற்காக ஒரு புதிய தற்காலிகக் குழு ஒன்று கடந்த 07 ஆம் திகதி அமைக்கப்பட்டது.

தேசிய அபிவிருத்தி இலக்குகள் மற்றும் தேசியத் தேவைகளின் அடிப்படையில் நாட்டில் மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆராய்ச்சி நடவடிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் வகைப்படுத்துவதே இந்தக் குழுவின் முக்கிய நோக்கமாகும்.

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிக உடுகமசூரிய மற்றும் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் தேசிய விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப ஆணைக்குழுவின் (NASTEC) தலைவர் பேராசிரியர் ரொஹான் பெர்னாண்டோ ஆகியோர் இந்தக் குழுவிற்குத் தலைமை தாங்குவார்கள்.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணி நிபுணர்கள் 20 பேர் இந்தக் குழுவில் இடம்பெறுவர்.

பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், கைத்தொழில் மற்றும் அரச நிறுவனங்களில் செயல்படுத்தப்படும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் கொள்கைகளை தேசிய வளர்ச்சி இலக்குகளுடன் சீரமைப்பதும், தேசிய வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை உரியவகையில் பயன்படுத்துவதற்காக ஆராய்ச்சி முன்னுரிமைகளின் அடிப்படையில் நிதி ஒதுக்கீட்டை ஊக்குவிப்பதும் இந்தக் குழுவின் ஏனைய  முக்கிய பணிகளாகும்.

இலங்கையில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறை நீண்ட காலமாக தனிமைப்படுத்தப்பட்ட, தனித்தனியாக பிரிந்த  கட்டமைப்பாக செயல்பட்டு வந்ததோடு பெரும்பாலும் பொருளாதார விரிவாக்கம் அல்லது சமூக முன்னேற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிடுகிறது.

இந்தக் குழுவை நிறுவுவதன் மூலம், தொடர்புள்ள தரப்பினர்களிடமிருந்து தரவுகளைச் சேகரிப்பதன் மூலமும், நிறுவன அறிக்கைகள் மற்றும் தேசிய ஆய்வுகள் மூலம் கீழ்மட்டத்திலிருந்து அமைச்சு மட்டம் வரை மிகவும்  செயற்திறனான, மூலோபாய மற்றும் சமூக தேவைகளுக்குப் பதிலளிக்கக்கூடிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையை உருவாக்க எதிர்பார்க்கிறது.

மேலும் தரவு அடிப்படையிலான முடிவெடுப்பது மற்றும் நிதி பொறுப்புக்கூறல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறை வரை விஸ்தரிப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

செம்மணியில் மீட்கப்பட்ட எலும்பு கூடுகளின் எண்ணிக்கை 65ஆக உயர்வு – இன்றுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்!

0

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகளின் எண்ணிக்கை 65ஆக உயர்வடைந்துள்ளது. 

அதேவேளை இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த 15 நாட்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில் , இன்றைய தினம் வியாழக்கிழமை மதியத்துடன் , தற்காலிகமாக அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டு , எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீள அகழ்வு பணிகளை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் 15ஆம் நாள் பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

அதன் போது, புதைகுழிகளில் அடையாளம் காணப்பட்ட 65 மனித எலும்பு கூட்டு தொகுதிகளும் முற்றாக இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. 

செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு நடவடிக்கைகள் இன்றைய தினத்துடன் 24 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01”  மனித புதைகுழியில் இருந்து 63 எலும்பு கூடுகளும் ,  “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02”  புதைகுழியில் இருந்து இரண்டு எலும்பு கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன. 

அதேவேளை  “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02”  புதைகுழியில் குழப்பகரமான முறையில் மனித எலும்பு சிதிலங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. 

மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகள் அனைத்தும் சட்ட வைத்திய அதிகாரியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட , பை , காலணிகள் , கண்ணாடி வளையல்கள் , ஆடையை ஒத்த துணிகள் , பொம்மை உள்ளிட்ட பொருட்கள் சான்று பொருட்களாக அடையாளப்படுத்தப்பட்டு , நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன. 

விண்ணில் ஜொலிக்கும் ’பக் மூன்’ ; இன்றிரவு காணத் தவறாதீர்கள்!

0

ஜூலை 2025 முழு நிலவு, பக் மூன் (Buck Moon) என்றும் அழைக்கப்படுகிறது, வியாழக்கிழமை  (ஜூலை 10) உதயமாகும், இது உலகெங்கிலும் உள்ள வான பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான சந்திர நிகழ்ச்சியை வழங்குகிறது.

சந்திரன் ஜூலை 10 அன்று மாலை 4:37 மணிக்கு EDT (2037 GMT) மணிக்கு முழு வெளிச்சத்தை அடையும், ஆனால் இந்த தருணம் எல்லா இடங்களிலும் தெரியாது.  

பக் மூன்‘ என்றால் என்ன?

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தின் முதல் பௌர்ணமி பக் மூன் என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலவு பொதுவாக மற்ற முழு நிலவுகளைக் காட்டிலும் மிகவும் பிரகாசமாகத் தெரியும்.

அதே சமயம், இது வழக்கத்தை விட வானத்தில் சற்றுத் தாழ்வாகக் காட்சியளிக்கும். இதற்குக் காரணம், கோடைக்கால கதிர் திருப்பு (summer solstice) நிகழ்வுக்கு இந்த நிலவு மிக அருகில் வருவதுதான்.

கோடைக்கால கதிர் திருப்பின்போது, பூமியின் ஒரு துருவம் சூரியனை நோக்கி அதிகபட்ச சாய்வில் இருக்கும். இதனால் பகல் நேரத்தில் சூரியன் வானில் மிக உயரமாக இருக்கும் நிலையில், நிலவு இரவு வானில் தனது மிகத் தாழ்வான பாதையில் பயணிக்கும்.


கருங்கல் கருமாரியம்மனை காணவில்லை!

0

மஸ்கெலியா, சாமிமலை நூத்தி தோட்ட சின்ன சோலங்கந்தை பிரிவில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கருங்கல்லினால் செதுக்கப்பட்ட கருமாரியம்மன் சிலை காணாமல் போயுள்ள சம்பவம் புதன்கிழமை (9) இரவு இடம் பெற்றுள்ளதாக குறித்த தோட்டத்தின் ஆலய பரிபாலன சபை தலைவர் தெரிவித்தார்.

மேலும் “ எமது மூதாதையர் எமது பிரிவில் உள்ள ஆலயத்தில் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு  மூன்றரை அடி உயரம் கொண்ட, கருங்கல்லால் செதுக்கப்பட்ட கருமாரி அம்மன் சிலையை வைத்து வணங்கி வந்தனர்.

அச் சிலைக்கு பதிலாக புதிய சிலை ஒன்று வைக்கப்பட்டு பழமையான சிலையை ஆலய முற்றத்தில் வைத்து வணங்கி வந்தனர். அந்த பெறுமதி மிக்க சிலை புதன்கிழமை (09) இரவு முதல் காணாமல் போயுள்ளது ” என பரிபாலன சபையினர் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக  மஸ்கெலியா பொலிஸார்  தெரிவித்தனர்.

மூதாட்டி பாலியல் வன்கொடுமை ; பேரன் கைது!

0

இந்தியா, இமாச்சலப் பிரதேசத்தில் 65 வயது பாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 25 வயது பேரன் கைது செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கணவர் இறந்த பிறகு தனியாக வசித்து வந்த மூதாட்டியை கடந்த   ஜூலை 3 ஆம் திகதி மதியம், அவரது பேரன் வீட்டிற்கு வந்து  பாலியல் வன்கொடுமை செய்து, இந்த சம்பவம் குறித்து யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக மூதாட்டி தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர்  கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

‘பேட் கேர்ள்’ படத்தின் ரிலீஸ் அறிவிப்பு!

0

வெற்றிமாறன் தயாரித்துள்ள ‘பேட் கேர்ள்’ படத்தின் வெளியீட்டு திகதியை அறிவித்துள்ளது படக்குழு.

வெற்றிமாறன் மற்றும் அனுராக் கஷ்யாப் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட் கேர்ள்’. இதன் டீசர் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இணையத்தில் பலரும் இதனை கடுமையாக விமர்சித்தார்கள். இதற்கு ஆதரவும், எதிர்ப்பு ஒரே சேர இருந்தன. தற்போது இப்படத்தின் வெளியீட்டு திகதியை படக்குழு அறிவித்துள்ளது.

செப்டம்பர் 5-ம் திகதி ‘பேட் கேர்ள்’ திரைப்படம் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. விரைவில் படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளையும் தொடங்கவுள்ளது. முன்னதாக, இப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துக் கொண்டு விருதுகளை வென்றுள்ளது. குறிப்பாக ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் மிக உயரிய விருதான NETPAC விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

‘பேட் கேர்ள்’ படத்தை எழுதி இயக்கியுள்ளார் வர்ஷா பரத். இவர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். இதில் அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹாரூன், Teejay அருணாசலம், சஷாங்க் பொம்மிரெட்டிப்பள்ளி, சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சூரிய குளியலின் போது டிரம்ப்புக்கு ஆபத்து; ஈரான் மிரட்டல்!

0

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அவரது வீட்டில் சூரிய குளியலில் ஈடுபடும் போது, டிரோன் தாக்குதலின் மூலம் கொல்லப்படுவது மிகவும் எளிதான ஒன்று என்று ஈரானின் மூத்த ஆலோசகர் ஜாவத் லரிஜானி கூறியிருப்பது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் அமெரிக்க தலையீட்டினால் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தப் போரின் போது, ஈரானின் அணுசக்தி நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது அந்நாட்டை ஜீரணிக்க முடியாத விஷயமாக மாறியுள்ளது. எனவே, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புக்கு எதிராக ஈரான் தலைவர்கள் வெளிப்படையான மிரட்டல்களையும், கருத்துக்களையும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், ஈரான் நாட்டு ஆட்சியாளரான அயதொல்லா அலி கமேனியின் மூத்த ஆலோசகர் ஜாவத் லரிஜானி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குறித்து பேசிய விஷயம் தற்போது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது; புளோரிடாவின் உள்ள அவரது வீட்டில் டிரம்ப் நீண்ட நேரம் சூரிய குளியல் போட முடியாது. ஏனெனில், அவர் மீது டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்படலாம். இது மிகவும் எளிமையான விஷயம்,’ என்று கூறினார்.

கடந்த 2020ம் ஆண்டு ஈரான் தளபதி சுலைமாணியை டிரம்ப் உத்தரவின் பேரில் அமெரிக்கா கொன்றதற்கு பழிவாங்கும் நோக்கில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இதனிடையே, ஈரான் தரப்பில் சுமார் ரூ.225 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது. ஈரான் ஆட்சியாளர் கமேனிக்கும், கடவுளுக்கும் எதிரானவர்களை அழிப்பதற்காக இந்த தொகை பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. ஈரான் மக்களும், வெளிநாடுகளில் வசிக்கும் ஈரானியர்களும் இதற்காக நிதியுதவி அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஈரான் மிரட்டல் குறித்து ஜனாதிபதி டிரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. உண்மையில் அது ஒரு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று கூறிய ஜனாதிபதி டிரம்ப், தான் கடைசியாக 7 வயதில் சூரிய குளியல் போட்டதாகவும், தனக்கு அதன் மீது ஆர்வமில்லை என்றும் கூறினார்.

பால் டீயின் விலை அதிகரிப்பு!

0

பால் டீயின் விலையை ரூ.10 அதிகரிப்பதாக அகில இலங்கை உணவகம் மற்றும் பார் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இறக்குமதி செய்யும் பால் மாவின் விலையை இறக்குமதியாளர்கள் அதிகரித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவகம் மற்றும் பார் உரிமையாளர்கள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

பால் மா இறக்குமதியாளர்கள் இறக்குமதி செய்யும் பால் மா 1 கிலோ கிராம் பாக்கெட்டின் விலையை ரூ.250 ஆல் மற்றும் 400 கிராம் பால் மா பாக்கெட்டின் விலையை ரூ.100 ஆல் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.