பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
தெஹிவலை பகுதியில் கைது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
தெஹிவலை பகுதியில் கைது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை குறிப்பிட்டு இனங்களுக்கு இடையில் குரோதத்ததை ஏற்படுத்தும் விதமாக சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் பத்தரமுல்ல பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண் சமூக ஊடகங்களில் காணொளி ஒன்றை வௌியிட்டு இவ்வாறு இனங்களுக்கு இடையில் குரோதத்தை ஏற்படுத்தும் விதமான கருத்துக்களை தெரிவித்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்கிஸ்ஸ சிறைச்சாலை பொறுப்பதிபாரி 40 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது நடைபெறும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மோசடியில் ஈடுபட்ட மாணவர்கள் தொடர்பில் விசாரணை இடம்பெறுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பீ.சனத் பூஜித் தெரிவித்துள்ளார்.
குற்றப்புலனாய்வத் திணைக்களம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
மோசடிகளைத் தவிர்ப்பதற்கு அனைத்துப் பரீட்சை நிலையங்களுக்கும் மேலதிக உதவி மண்டப தலைமை அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆமர் வீதி பொலிஸ் நிலையத்தில் உள்ள கான்ஸ்டபிள் ஒருவரின் குடும்ப உறுப்பினர்கள் இருவரிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இன்று (19) காலை அத தெரணவுடன் இணைந்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக ஆமர் வீதி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உட்பட 16 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மதுகம ஓவிடிகம மற்றும் பதுகம புதிய காலனி ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் விகாராதிபதி ஒருவரும் மற்றும் நான்கு தேரர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல், 11 பெண்களும் அடங்குவதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.
இவர்கள் கடந்த 07 ஆம் திகதி அனுராதபுரத்திற்கு சுற்றுலா பயணமொன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்ய உத்தரவிடப்பட்ட ரிஷாட் பதியுதீன் அரசாங் கத்தினால் பாதுகாக்கப்படுகின்றார் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் மற்றும் அவரது சகோதரர் ஆகிய இருவரும் அரசால் பாதுகாக்கப்படுகின்றார்கள் என்று வெளியாகும் கருத்துக்களுக்குப் பொறுப்பேற்பதாக அவர் தெரிவித்தார்.
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது இ.போ.ச. பஸ்களில், புத்த ளத்திலிருந்து மன்னாருக்கு மக்களை ஏற்றிச்சென்றமை தொடர்பாக அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது மற்றும் தேர்தல் சட்டங் களை மீறிய குற்றச்சாட்டில் ரிஷாட் பதியுதீனை கைது செய்யச் சட்டமா அதிபர் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இருப்பினும் ரிஷாட் பதியுதீனை கைது செய்யப் பிடியாணை தேவை யில்லை என்று நீதிமன்றம் அறிவித்ததில் இருந்து சில நாட்கள் கடந்து விட்ட போதிலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பாராளுமன்ற உறுப்பினரைக் கைது செய்யத் தவறிவிட்டது என அவர் தெரிவித் துள்ளார்.
இரண்டு பௌத்த மத பீடங்கள், 20வது திருத்தச்சட்டத்தை எதிர்த்திருக்கின்றன. அதே வேளை, கத்தோலிக்க ஆயர் பேரவையும் 20வது திருத்தச்சட்டத்தை எதிர்த்து அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கின்றது. கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் இதனை வரவேற்றிருக்கின்றார். அத்துடன், இதனை எதிர்க்கும் பௌத்த மதபீடங்களும் கத்தோலிக்க ஆயர் பேரவையும் புதிய அரசியலமைப்பு ஒன்றை கொண்டுவருவதற்காகவும் குரல் கொடுக்க வேண்டுமென்று சம்பந்தன் கோரியிருக்கின்றார்.
கூட்டமைப்பின் கடந்த நாடாளுமன்ற காலம் முழுவதும் ஒரு அரசியல் யாப்பிற்கான கதையுடன் முடிவுற்றிருந்தது. எத்தனையோ விடயங்கள் இடம்பெற்றன. மக்கள் கருத்தறியும் குழுவின் பரிந்துரைகள், இடைக்கால அறிக்கை, உப குழுக்களின் அறிக்கை – என பல விடயங்கள் இடம்பெற்றன. ஆனால் இறுதியில் அனைத்துமே புஸ்வாணமாகியது. ராஜபக்சக்களை தோற்கடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆட்சி மாற்றம் மீ;ண்டும், அவர்களை முன்னரைவிடவும் பலமானவர்களாக எழுச்சியுறச் செய்திருக்கின்றது.
இந்த நிலையில்தான் நாட்டை முன்னைய நிலைக்கு கொண்டு செல்வதில் அவர்கள் தங்களை ஈடுபடுத்தியிருக்கின்றனர். இதன்போதான சில, உள் முரண்பாடுகளினால்தான் 20வது திருத்தச்சட்டம் இன்று பேசுபொருளாகியிருக்கின்றது. இதனை பௌத்த மதபீடங்களில் இரண்டு எதிர்த்திருப்பது தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அல்ல. அதே வேளை கத்தோலிக்க ஆயர் பேரவையும் இதனை தமிழ் மக்களுக்காக எதிர்க்கவில்லை. கர்தினால் மெல்கத் ரஞ்சித் எந்தக் காலத்திலும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவரும் அல்ல. இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சினையிருக்கின்றது. அதற்கு ஒரு நியாயமான தீர்வை காண வேண்டியது அவசியம் என்னும் நிலைப்பாட்டை பௌத்த மதபீடங்கள் எந்தக் காலத்திலுமே ஆதரித்ததில்லை. இந்த நிலையில் சம்பந்தன் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் பௌத்த மதபீடங்கள் புதிய அரசியல் யாப்பிற்கு ஆதரவளிக்க வேண்டுமென்று கூறுகின்றார். பௌத்த மதபீடங்களிடம் புதிய அரசியல் யாப்பிற்கான ஆதரவை கோரும் சம்பந்தன், அரசியல் யாப்பில் பௌத்தத்திற்கு முதலிடம் என்பதையும் கைவிடுமாறு பௌத்த மதபீடங்களை கோருவாரா?
பொதுவாக சம்பந்தனை அரசியலில் பழுத்தவர் என்று சொல்வதுண்டு. ஆனால் அவரின் பழுத்த அனுபவம் இதுவரையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிப்படவில்லை. ரணில் என்னும் ஒரு தனிநபரை நம்பி, ஜந்து வருடங்களை அவர் வீணாக்கினார். ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் போது ஆதவளித்தார். மைத்திரிபால சிறிசேனவிற்கும் ரணிலுக்கும் இடையில் அதிகாரப் போட்டியுருவான போது, ரணிலுக்கு ஆதரவாக வழக்காடினார். ஆனால் ஆட்சி மாற்றத்தால் தமிழ் மக்களுக்கு எந்தவொரு நன்மையும் இல்லாமல் போனது. இப்போது மீண்டும் ராஜபக்சக்களின் அரசாங்கம் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பேசுகின்றது. ஒரு வேளை அவ்வாறானதொரு யாப்பை அவர்கள் கொண்டுவரக் கூடும். ஆனால் அப்படியொரு யாப்பு வந்தாலும் கூட, அது நிச்சயமாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாஸைகளை பூர்தி செய்வதற்கான அரசியல் யாப்பாக ஒரு போதுமே இருக்கப் போவதில்லை.
தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடிய ஒரு அரசியல் யாப்பை சிங்கள அரசாங்கங்கள் ஒரு போதுமே கொண்டுவரப் போவதில்லை. ஒரு வேளை அப்படியொரு அரசியல் யாப்பை கொண்டுவர அரசாங்கம் முயற்சி செய்தாலும் கூட, அதனை சிங்கள பௌத்த மதபீடங்கள் ஒரு போதுமே ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. மதபீடங்கள் ஏற்றுக்கொள்ளாத ஒன்றை சிங்கள பெரும்பான்மை மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இதுதான் இந்த தீவின் அரசியல் யதார்த்தம். இன்று அரசியல் யாப்பிலிருக்கும் 13வது திருத்தச்சட்டம் இந்தியாவின் பலத்தை பிரயோகித்து திணிக்கப்பட்ட ஒன்று. இதனால்தான் அதனை எப்படியாவது அகற்ற வேண்டுமென்பதில் சிங்கள பௌத்த மதபீடங்களும், சிங்கள தேசியவாத அமைப்புக்களும் அவ்வப்போது ஒற்றைக்காலில் நிற்கின்றன.
இந்த விடயங்களை சம்பந்தனால் விளங்கிக்கொள்ள முடியவில்லையா – அதுவும் பழுத்த – முதிர்ச்சிமிக்க ஒரு அரசியல் தலைவரால்!
-ஆசிரியர்
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ளவர்களுக்கு 5000 ரூபா வழங்க அரசாங்கம் நிதியை ஒதுக்கியுள்ளது.
இந்நிலையில், கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபா நிதியுதவி வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சுமார் 75 ஆயிரம் குடும்பங்களுக்காக 400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 20 ஆம் திகதி முதல் 5 ஆயிரம் ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டது.
கஹாதுடுவ பகுதியில் அமைந்துள்ள “ஹைட்ராமணி ” ஆடைத் தொழிற்சாலையின் அதிகாரி ஒருவர் கொரோ னா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.குறித்த அதிகாரிக்கும் அவரது சகோதரருக்கும் கொ ரோ னா தொற்று இருப்பது கண்ட றியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.குறித்த நபர்கள் ஒலபோடுவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இவர்கள் இருவரும் கம்பஹா மாவட்டத்தின் மினுவங்கொட பகுதியில் இடம்பெற்ற திருமண வைபவத்தில் கலந்து கொண்டு அங்கு கொரோனா தொற்றா ளர்களுடன் கலந்துரையாடியமை தெரியவந்துள்ளது.குறித்த ஆடைத் தொழிற்சாலையின் அனைத்து ஊழியர் களுக்கும் பி .சி .ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் மேலும் தேவைக்கேற்ப தனிமைப் படுத்தப்படுவார்கள் என்றும் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.