27.5 C
Colombo
Saturday, July 12, 2025
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe
Home Blog Page 6091

யாழ். பல்கலையில் அமைக்கப்பட்ட நவீன ஆய்வு மையத் தொகுதி திறப்பு விழா

0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தில், ஜெய்க்கா செயற்றிட்டத்தின் கீழ் கல்வி அமைச்சினால் 2 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட விவசாய ஆய்வுகள் மற்றும் பயிற்சிக்கான ஆய்வுமையக் கட்டடத் தொகுதி எதிர்வரும் 31 ஆம் திகதி சனிக்கிழமை திறப்பு வழா காண இருக்கிறது.

கடந்த வருடம் இதன் கட்டட மற்றும் அமைப்பு வேலைகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டிருந்த போதிலும், திறப்பு விழா ஒழுங்கமைப்பில் காணப்பட்ட இழுபறி நிலையினால் மிக நீண்ட காலமாகப் பாவனைக்கு விடப்படாமல் இருந்து வந்தது.

2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட செயல் திட்டத்தின் கீழ் 1.6 பில்லியன் ஜப்பானிய ஜென் (இலங்கை ரூபாயில் 2.2 பில்லியன்) பெறுமதிக்கு கட்டடங்கள் மற்றும் ஆய்வு கூட உபகரணங்கள் மற்றும் நவீன விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டிருந்தன.

கட்டுமானப் பணிகள் கடந்த வருடம் நிறைவு பெற்ற பின்னரும், பாவனைக்கு விடாதமை குறித்துக் கவலையடைந்த ஜப்பானிய அரசாங்கம், அதனை விரைவில் திறந்து பாவனைக்கு விடுமாறு யாழ். பல்கலைக்கழகத் துணை வேந்தருக்கு அழுத்தம் கொடுத்ததை அடுத்து, இந்தக் கட்டடத் தொகுதியை எதிர்வரும் 31 ஆம் திகதி திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கட்டடத் தொகுதித் திறப்பு விழாவுக்கு கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இலங்கைக்கான ஜப்பானிய உயர்ஸ்தனிகர் அகிரா சுகியமா, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, கடற்றொழில், நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.

அஞ்சல், தொலைபேசி , மின்னஞ்சல் ஊடாக ஜனாதிபதி அலுவலகத்துடன் தொடர்பு கொள்ள சந்தர்ப்பம்!

0

கொரோனா வைரஸ் (கொவிட் 19) நோய்த் தொற்றை ஒழிப்பதற்காக சுகாதாரத் துறை வழங்கியுள்ள பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளுக்கு ஏற்ப பொது மக்களுக்கு ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகைதருதல் மற்றும் அலுவலகத்தில் குறைந்தளவான அலுவலர்கள் சேவையை வழங்குதல் என்பவற்றின் மூலம் ஏற்படும் அசௌகரியங்களை கவனத்திற் கொண்டு, அஞ்சல், தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் ஊடாக முன்வைக்கப்படும் பொது மக்கள் கோரிக்கைகளுக்கு பதிலளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் ஜனாதிபதி அலுவலகத்தின் பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு, ஒம்புட்ஸ்மன் அலுவலகம் மற்றும் ஜனாதிபதி நிதியத்துடன் பின்வரும் இலக்கங்களின் ஊடாக தொடர்புகொள்ள முடியும்.

ஜனாதிபதி பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு

தொலைபேசி எண் – 0114 354 550 / 0112 354 550
தொலைநகல் – 0112 348 855
மின்னஞ்சல் – publicaffairs@presidentsoffice.lk

ஒம்புட்ஸ்மன் அலுலவகம்

தொலைபேசி எண் – 0112338073
மின்னஞ்சல் – ombudsman@presidentsoffice.l

ஜனாதிபதி நிதியம் தொலைபேசி எண் – 0112354354
கிளை எண் (4800 / 4814 / 4815 / 4818)
தொலைநகல் – 0112 331 243
மின்னஞ்சல் – fundsecretary@presidentsoffice.lk

சில இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை

0

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்திலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மழை நிலைமை : காங்கேசந்துறையில் இருந்து முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளில் இருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 – 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45 – 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை : ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

இலங்கைக்கு 4 PCR பரிசோதனை இயந்திரங்களை வழங்கிய அவுஸ்திரேலிய அரசு

0

அவுஸ்திரேலிய பாதுகாப்புத் துறை மற்றும் அவுஸ்திரேலிய உள்துறை திணைக்களம் இணைந்து 4 பி.சீ.ஆர் சோதனை இயந்திரங்களை இலங்கை கடற்படைக்கு, கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து அண்மையில் வழங்கியது.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசாங்கம் வகுத்துள்ள ஒருங்கிணைந்த பொறிமுறையை வலுப்படுத்துவதற்காக, கடற்படை கடல் மண்டலத்தில் மேற்கொள்ளும் வழக்கமான நடவடிக்கைகளின் போது கடற்படைக்குத் தேவையான திறமையான மற்றும் பயனுள்ள பி.சீ.ஆர் பரிசோதனையை மேற்கொள்வதுக்காக இந்த பி.சீ.ஆர் சோதனை இயந்திரங்கள் அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்டன.

அதன்படி, அவுஸ்திரேலிய பாதுகாப்புத் துறையால் 2 பி.சீ.ஆர் இயந்திரங்களும் அவுஸ்திரேலிய உள்துறை திணைக்களத்தால் 2 பி.சீ.ஆர் சோதனை இயந்திரங்களும் கடற்படைக்கு வழங்கப்பட்டன, இந்த பி.சீ.ஆர் இயந்திரங்கள் ஒரே நேரத்தில் 4 மாதிரிகள் சோதனை செய்வதற்கான திறன் கொண்டுள்ளது.

அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் குரூப் கேப்டன் ஷொன் அன்வின் வழங்கிய பி.சீ.ஆர் பரிசோதனை இயந்திரங்கள், கடற்படை சார்பில் கடற்படை நடவடிக்கைகளின் இயக்குநர் கொமடோர் பிரசன்ன மஹவித்தனாவால் பெறப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் டேவிட் ஹோலி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் உள்துறை விவகாரங்களுக்கான ஆலோசகர் ஹசன் சோவைட் மற்றும் கடற்படை மருத்துவ சேவைகள் இயக்குநர் (நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை) ஆகியோர் கலந்து கொண்டனர்.

ரிஷாட் பதியுதீன் சரணடைய வேண்டும்!- இராஜாங்க அமைச்சர்

0

ரிஷாட் பதியுதீன் பொலிஸாரிடம் சரணடைய வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா கோரிக்கை விடுத்துள்ளார்.

நுவரெலியா – டயகமவில் இன்று (17) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் நிறைவேறிய பின்னர் ஜனாதிபதிக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கும் என சிலர் கூறுகின்றனர், உண்மை அதுவல்ல, நாட்டில் இதற்கு முன்னர் ஜனாதிபதி பதவியை வகித்தவர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைக்காட்டிலும், குறைந்தளவான அதிகாரங்களே ´20´ ஊடாக ஜனாதிபதிக்கு கிடைக்கும். உயர்நீதிமன்றத்தின் சட்ட வியாக்கியானம் வெளியான பின்னர் இது தெரியவரும்.

நாட்டுக்கு சேவையாற்றுவதற்காகவே ஜனாதிபதிக்கு நாட்டு மக்கள் அமோக ஆணையை வழங்கினர், அவ்வாறு சேவையாற்றுவதற்கு ´19´ தடையாக உள்ளது. அது நீக்கப்படும் என்ற உறுதிமொழியை மக்களுக்கு வழங்கியிருந்தோம். இதற்கு மக்களும் வாக்குரிமைமூலம் அனுமதி வழங்கினர். எனவே, கட்டாயம் 20ஆவது திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றப்படவேண்டும்.

ரிஷாட் பதியுதீன் விவகாரம் தொடர்பான விசாரணை பொறிமுறைமீது எமக்கும் பலத்த சந்தேகம் உள்ளது. உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரிடம் அறிக்கை கையளித்துள்ளோம். நீதி கிடைக்கும் என நம்புகின்றோம்.

நீதித்துறையில் நாம் தலையிடவில்லை. எவருடனும் அரசியல் டீலும் இல்லை. நாட்டில் சுயாதீன ஆணைக்குழுக்கள் உள்ளன.

அதேவேளை, ரிஷாட் பதியுதீன் நீதிமன்றத்தில் முன்னிலையாகவேண்டும் என்பதே எமது கோரிக்கையும். ரவூப் ஹக்கீமும் இந்த கோரிக்கையை விடுத்திருந்தார். எனவே, தலைமறைவாகாமல் சரணடையுமாறு வலியுறுத்துகின்றோம் என்றார்.

Pelwatte தயாரிப்புகள் தற்போது இலங்கையின் முன்னணி சுப்பர்மார்க்கெட்டுக்களிலும் கிடைக்கின்றன

0

இலங்கையின் உயர் தர பாலுற்பத்தியாளரான Pelwatte Dairy Industries, தனது தயாரிப்புகள் பலவற்றை தற்போது நாட்டின் முன்னணி சுப்பர்மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வந்துள்ளது.

பால், யோகர்ட், ஐஸ் கிறீம் உட்பட தனது ஆரோக்கியமான, புதிய தயாரிப்பு வரிசைகளுக்கு நன்கறியப்பட்ட இந் நிறுவனம் தனது பூண்டு பட்டர், உப்பு சேர்க்கப்படாத பட்டர் மற்றும் நெய் வரிசையை Arpico, Keells, SPAR மற்றும் Softlogic விற்பனையகங்களில் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

“எமது பல தரப்பட்ட தயாரிப்புகளை காட்சிப்படுத்த நாட்டில் உள்ள முன்னணி சுப்பர்மார்க்கெட்டுக்களுடன் கைகோர்த்தமை தொடர்பில் நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம்.

எமது தயாரிப்புகளும் புதிய பாலின் போஷாக்கு நிறைந்தவை என்பதுடன் காப்புப்பொருள்கள் அற்றவை. Pelwatteநெய் என்பது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிடித்த எமது தயாரிப்புகளில் ஒன்றாகும். இது உட்பட மேலும் பல தயாரிப்புகளை சுப்பர்மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வருகின்றமை தொடர்பில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளோம்,” என Pelwatte Dairy Industries இன் முகாமைத்துவ பணிப்பாளர் அக்மால் விக்ரமநாயக்க தெரிவித்தார். Pelwatte Dairy இன் 230 கிராம் நெய் ஜாடிகளை எந்தவொரு Keells இலும் கொள்வனவு செய்துகொள்ள முடியும் என்பதுடன் பூண்டு பட்டர் மற்றும் உப்பு சேர்க்கப்பட்ட பட்டர் ஆகியவற்றை நாடுபூராகவும் உள்ள அனைத்து Cargills விற்பனையகங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும். மேலும், Lanka Sathosa சுப்பர்மார்க்கெட்டுகளில் Pelwatte இன் ஐஸ் கிறீம் வரிசை, யோகர்ட் வரிசை மற்றும் உப்பு சேர்க்கப்பட்ட, உப்பு சேர்க்கப்படாத பட்டர் வகைகளும் விற்பனைக்கு வந்துள்ளன.

மேலும் இலங்கையின் முன்னணி சுப்பர்மார்க்கெட்டுகளுடன் இணைந்து Pelwatte Dairy, செலுத்தும் பணத்துக்கு ஏற்ற பெறுமதியை வழங்கும் பல டீல்கள் இந்த ஒக்டோபர் வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த கவர்ச்சிகரமான கழிவுகளானது, Keells விற்பனையகங்களில் உப்பு சேர்க்கப்பட்ட பட்டரின் 200 கிராம் பொதிக்கு ரூபா 60 தள்ளுபடியையும், Arpico விற்பனையகங்களில் உப்பு சேர்க்கப்படாத பட்டர் 200 கிராம் பொதிக்கு ரூபா 41 தள்ளுபடியும், Sirilak SUPER – கொஸ்வத்தையில் ஐஸ் கிறீம் தவிர்ந்த குளிரூட்டப்பட்ட தயாரிப்புகளுக்கு உச்சபட்ச சில்லறை விலையில் 10% தள்ளுபடியையும் பெற்றுக்கொள்ள முடியும்.

தரம், சுவை என்பனவற்றுக்கான Pelwatte Dairyஇன் உறுதியான அர்ப்பணிப்பு அதன் தயாரிப்புகளில் பிரதிபலிப்பதுடன், வாடிக்கையாளர்களுக்கு உயர்ந்த பட்ச பெறுமதியை இவை வழங்குகின்றன. எமது எந்தவொரு தயாரிப்பிலும் எவ்வித காப்புப்பொருள்களும் சேர்க்கப்படுவதில்லை, உதாரணமாக Pelwatte பட்டரைக் குறிப்பிடுவதாயின், இது முற்றிலும் இயற்கையானதாகும், ஏனெனில் இது கொழுப்பு வீதத்தைக் கட்டுப்படுத்த தரப்படுத்தல் செயன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றது.

Pelwatte இன் ஐஸ்கிறீம் வரிசையானது இலங்கையின் தேசிய தர நிர்ணய நிறுவகத்தின் (SLS) தரநிலைகளுக்கு இணங்கி தயாரிக்கப்படுகின்றது. இந்த விசுவாசமான அர்ப்பணிப்பு நிச்சயமாக நிறுவனத்தினை ஏனையோரிடமிருந்து வேறுபடுத்தும் காரணியென்பதுடன், நாட்டில் மிகவும் விரும்பப்படும் பால் வர்த்தகநாமமாக மாற்றியுள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று திடீரென அதிகரித்துள்ளமையை பற்றி விக்ரமநாயக்க கருத்து தெரிவிக்கையில்: “அண்மைய நிகழ்வுகளை கருத்தில் கொண்டு,Pelwatte பால் தொழிற்துறையானது நாம் எமது தேசத்தை ஆதரிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். இந்த ஆண்டின் ஆரம்பத்தில் முடக்கல் நிலையின் போது இலவசமாக வீட்டுக்கு வீடு விநியோக சேவையை வழங்கியதுடன், தொற்றுநோயை சமாளிக்க தேசத்திற்கு உதவ பல சமூக பொறுப்புணர்வு மற்றும் நுகர்வோர் அணுகல் திட்டங்களையும் முன்னெடுத்தது. தொற்றாளர்களின் எண்ணிக்கை உயரும் பட்சத்தில், நாம் எமது இந்த நாட்டுக்கும், பாலுற்பத்தித் துறைக்கும் எமது அர்ப்பணிப்பை உறுதிசெய்வதுடன், எமது தயாரிப்பு நடவடிக்கைகளானது தொடர்ந்து உட்சபட்ச பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கையுடன் முன்னெடுக்கப்படுமென்பதை உறுதி செய்வோம், என்றார்.

உள்ளூர் பால் விவசாயிகளின் சமூக-பொருளாதார நிலையை உயர்த்தும் அதே வேளையில் நாட்டின் உள்நாட்டு பால் தேவையை பூர்த்தி செய்வதில் Pelwatte Dairy எப்போதும் தீவிரமாக கவனம் செலுத்துகிறது. பால் உற்பத்தியில் நாட்டின் தன்னிறைவு முதன்மையான நோக்கமாக இருக்கும்போது, ​​ Pelwatte Dairy பண்ணையாளர்கள், அவர்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் குடும்பங்களை எண்ணற்ற வழிகளில் ஆதரிக்கிறது – அவர்களை வலுவூட்டி, அவர்களின் வளர்ச்சியையும் தேசத்தின் வளர்ச்சியையும் வழிநடத்துகிறது.

பால் மற்றும் தொடர்புடைய தயாரிப்புகளின் உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதில் இலங்கைக்கு பெரும் ஆற்றல் உள்ளது. அந்த முயற்சியில் தேசத்தை வழிநடத்தும் உறுதிமொழியை Pelwatte Dairy Industries தொடர்ந்து நிலைநிறுத்தும்.

சமஸ்த லங்கா தஹம் சுவந்த நிலையம் மற்றும் கொழும்பு ரிமாண்ட் சிறைச்சாலைக்கு முகக்கவச நன்கொடையை நீட்டித்துள்ள மொபிடெல்

0

கொவிட் 19 தொற்று பரவிடும் சவால்மிகு காலத்தில் இலங்கையர்களுக்கு உதவிடும் நோக்கத்துடன் இலங்கையின் தேசிய மொபைல் சேவை வழங்குனர்களான மொபிடெல் தமது சமூக பொறுப்புணர்வு முன்னெடுப்பினை நீடித்துள்ளது.

அந்த வகையில் இலங்கையின் இரண்டு நிறுவனங்களுக்கு 7500 முகக்கவசங்களை நன்கொடையாக வழங்கியது.

மொபிடெலின் சிரேஷ்ட சந்தைப்படுத்தல் அதிகாரி சஷிக செனரத் 5000 முகக்கவசங்களை சமஸ்த லங்கா தஹம் சுவந்த நிலையத்துக்கு கையளித்தார். இந்நன்கொடையின் முக்கிய நோக்கம் இலங்கை முழுவதும் உள்ள பாடசாலை மாணவர்களினிடையே இம்முகக்கவசங்களை பகிர்ந்தளிப்பதாகும். அத்தோடு 2500 முகக்கவசங்கள் கொழும்பு ரிமாண்ட் சிறைச்சாலைக்குக் கையளிக்கப்பட்டது. இது சிறைச்சாலை காவலர்களுக்கும் கைதிகளுக்கும் கொவிட் 19 பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் கையளிக்கப்பட்டது.

தேசிய மொபைல் சேவை வழங்குனர் என்ற வகையில் மொபிடெல் கொவிட் 19 பரவலைக் கட்டுப்படுத்திட தேசிய ரீதியாக எடுக்கப்பட்ட பல முன்னெடுப்புக்களுக்கு உதவிசெய்துள்ளது. மேலும் மொபிடெல் மற்றும் SLT, மனுசத் தெரனவுடன் கூட்டிணைந்து 1 மில்லியன் முகக்கவசங்களை பகிர்ந்தளித்தது.

Proxone app இல் தற்போது பெருமளவு உடற்தகைமை மற்றும் பொழுதுபோக்கு உள்ளம்சங்கள் அடங்கியுள்ளன

0

கடந்த மாதம் உடற்தகைமை துறையில் புரட்சியை ஏற்படுத்திய வண்ணம் Power World gyms இனால் அறிமுகம் செய்யப்பட்ட Proxone app ஊடாக pay-as-you-go வசதி வழங்கப்படுவதுடன் இந்த Proxone app இல் தற்போது பெருமளவு உடற்தகைமை பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு உள்ளம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

´அனுபவத்துக்கான சுதந்திரம்´ எனும் கொள்கையை மீளமைக்கும் வகையில் அமைந்துள்ள இந்த Proxone app ஊடாக பாவனையாளர்களுக்கு தமது உடற்தகைமை இலக்குகளுக்கமைய ஒரு செயற்பாட்டுக்கு மட்டுப்படுத்தப்படாமல் காலம் மற்றும் இடம் என எவ்வித சிக்கல்கள் அல்லது வரையறைகளுமின்றி அவற்றை எய்தக்கூடியதாக அமைந்துள்ளது. எந்தவொரு நேரத்திலும் எந்தவொரு பகுதியிலிருந்தும் உடற்தகைமை செயற்பாட்டை அணுகுவதை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது.

Proxone ஊடாக தற்போது 150 க்கும் அதிகமான செயற்பாடுகளை அணுகும் வாய்ப்பு வழங்கப்படுகின்றது. இதில் ரக்பி விளையாட்டுகள் வெளியிட குத்துச்சண்டை வகுப்புகள் உயர் வினைத்திறன் பயிற்சி (HIT), Zumba, தெரிவு செய்யப்பட்ட குழுக்களுக்கு – பெண்களுக்கு மாத்திரம் உடற்தகைமை செயற்பாடுகள் சிரேஷ்ட பிரஜைகள் அடங்கியுள்ளன. குறிப்பாக நீச்சல் டெனிஸ் உதைப்பந்தாட்டம் பூப்பந்தாட்டம் ஸ்கொஷ் கூடைப்பந்தாட்ட மைதானம் மற்றும் உங்கள் இருப்பிடத்துக்கு அருகாமையில் அமைந்துள்ளன பல உடற் தகைமை செயற்பாடுகள் பல அடங்கியுள்ளன.

கொழும்பையும் அதனைச் சூழவுள்ள பகுதிகளையும் சேர்ந்த வெளியக செயற்பாடுகள் தினசரி மு.ப. 5.30 முதல் மு.ப. 7.00 மணி வரையும் மற்றும் பி.ப. 5.15 முதல் பி.ப. 6.45 வரையும் கிடைப்பதுடன், ஒரு வகுப்புக்கு தலா 250 ரூபாய் எனும் குறைந்த தொகை அறவிடப்படும். பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு தாம் விரும்பும் பயிற்றுவிப்பாளரை தெரிவு செய்து கொள்ள முடியும். இதற்காக Proxone App இல் தெரிவு செய்து கொள்ள ஏராளமான பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் வழிகாட்டிகளின் தகவல்கள் காணப்படுகின்றன.

பவர் வேர்ள்ட் ஜிம்ஸ் ஸ்தாபகரும் தவிசாளரும், Proxone, இன் தயாரிப்பாளருமான தலவு எஃவ் அலைலிமா கருத்துத் தெரிவிக்கையில் ´உடற்தகைமை ஆர்வலர்களுக்கு பெருமளவு தெரிவுகளை பெற்றுக் கொடுக்க முடிந்ததையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். துறையில் காணப்படும் பாரம்பரிய வழிமுறைகளை தகர்த்து இன்றைய கால கட்டத்துக்கு உகந்த புதிய வாழ்க்கை முறை தெரிவுகளை வழங்குவதில் நம்பிக்கை கொண்டுள்ளோம். Proxone என்பது பாவனையாளர்களுக்கு ஒப்பற்ற அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன்ரூபவ் அவர்களின் உடற்தகைமை இலக்குகளை எய்துவதற்கு உதவியாக அமைந்துள்ளது.´ என்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ´எமது பின்புல மற்றும் விநியோகத் தொடர் உட்கட்டமைப்பு வசதியை வலிமைப்படுத்தி விரிவாக்கம் செய்வது தொடர்பில் கவனம் செலுத்துவோம். அதனூடாக, தினசரி அதிகரித்துச் செல்லும் செயற்பாடுகள் மற்றும் விற்பனை நிலையங்களில் பின்பற்றப்படும் நடவடிக்கைகளையும் உள்வாங்கக்கூடியதாக இருக்கும்.´ என்றார். app என்பது உயர் மூலோபாயத் திட்டத்தை அடிப்படையில் அமைந்துள்ளது. குறிப்பாக வளர்ச்சி மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையிலுள்ளது. வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த நிபுணர் அணியினரால் Proxone அங்கத்தவர்களுக்கு பெருமளவு தெரிவுகளை Pay-As-You-Go அடிப்படையில் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 74 இலட்சத்தை தாண்டியது

0

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச் சத்தை அடைந்து­­­ வரும் நிலையில், இன்று இதுவரை இல் லாத அளவுக்கு அதிகபட்சமாக கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகியிருக்கிறது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் களின் எண் ணிக்கை 74 இலட்சத்தை தாண்டியது. 65.24 இலட்சம் பேர் குண மடைந் துள்ளதாக அந்நாட்டு ஊடகங் கள் தகவலை வெளியிட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. அதே சமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக் கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தக வலின்படி இந்தியாவில் மொத்த எண்ணிக்கை  74  இலட்சத்து 32 ஆயிரத்து 680 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 65 இலட்சத்து 24 ஆயி ரத்து 595 பேர் குணமடைந் துள்ளனர், 7 இலட்சத்து 95 ஆயிரத்து 087 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் மொத்த எண் ணிக்கை 1,12,998 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

சீனாவில் முஸ்லீம்களுக்குஎதிராக இனப்படுகொலைபோன்றநடவடிக்கைகள்- அமெரிக்காகுற்றச்சாட்டு

0

சீனாதனதுசின்சியாங் மாகாணத்தில் முஸ்லீம்களைகிட்டத்தட்ட இனப்படுகொலைசெய்கின்றதுஎனஅமெரிக்காவின் தேசியபாதுகாப்புஆலோசகர்ரொபேர்ட் ஓ பிரையன் தெரிவித்துள்ளார்.

அது இனப்படுகொலையில்லைஎன்றால் அதற்குசமமானஏதோவொன்றுசின்சியாங்கில் முஸ்லீம்களுக்கு இடம்பெறுகின்றதுஎனஅவர்குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்டமாநிலத்தில் மனிதர்களின் தலைமுடிகளில் இருந்துதயாரிக்கப்பட்டதலைமுடிதொடர்பானபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகஅவர்குறிப்பிட்டுள்ளார்.

சீனாஉய்குர் இனப்பெண்களின் தலைகளைமொட்டையடித்துதலைமுடிதொடர்பானபொருட்களைதயார் செய்துஅமெரிக்காவிற்குஅனுப்புகின்றதுஎனஅவர்குறிப்பிட்டுள்ளார்.
மனிததலைமுடியிலிருந்துதயாரிக்கப்பட்டபொருட்கள் அடங்கியகப்பலொன்றைகடந்த ஜூன் மாதம் கைப்பற்றியதாகஅமெரிக்காதெரிவித்திருந்ததுடன் அந்தபொருட்கள் மனிதர்களைகட்டாயப்படுத்திதயாரிக்கப்பட்டவைஎனவும் குறிப்பிட்டிருந்தது.

சீனஅரசாங்கம் உய்குர் இனத்தவர்களுக்கும் ஏனைய சிறுபான்மையினத்தவர்களுக்கும் எதிராகமுன்னெடுக்கின்றநடவடிக்கைகளைகண்டித்துவரும் அமெரிக்காசீனஅதிகாரிகளுக்குஎதிராகதடைகளையும் விதித்துள்ளது.
சின்ஜியாங்கில் சீனா முஸ்லீம்களுக்குஎதிராககட்டாயகருத்தடைகருக்கலைப்புமற்றும் குடும்பகட்டுப்பாடுபோன்றவற்றைமுன்னெடுக்கின்றதுஎனஅமெரிக்க இராஜாங்கசெயலாளர்தெரிவித்துள்ளார்.

சின்ஜியாங்கில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்களும் மனிதஉரிமைசெயற்பாட்டாளர்களும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்எனஐக்கியநாடுகள் குற்றம்சாட்டியுள்ளது.