27.2 C
Colombo
Sunday, July 13, 2025
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe
Home Blog Page 7

அமெரிக்க விசா செலவு உயரும்!

0

அமெரிக்க அரசு விசா நிபந்தனைகள், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், விசா கட்டணத்தையும் இரண்டரை மடங்கு அளவுக்கு உயர்த்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் இந்தாண்டு ஜனவரியில் பதவியேற்றதில் இருந்து விசா வழங்குவதில் பல நிபந்தனைகளையும், கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில், ‘பிக் பியூட்டிபுல் பில்’ எனப்படும் அரசு செலவீனம் தொடர்பான மசோதா சமீபத்தில் நிறைவேறியது. இதற்கு ஜனாதிபதி டிரம்பும் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டத்தின்படி, விசா கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன.

இதன்படி, குடியேற்றம் அல்லாத, மாணவர், தொழில், சுற்றுலா போன்ற விசாக்களுக்கான கட்டணங்களுடன், ‘இன்டகிரிட்டி’ எனப்படும் நேர்மை கட்டணமாக, 250 டொலர்  கூடுதலாக வசூலிக்கப்படும். மேலும் சில கூடுதல் கட்டணங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இவை, 2026ல் இருந்து நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இது அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். இந்த கூடுதல் கட்டணம், நிபந்தனைகளின் அடிப்படையில் நாடு திரும்பும்போது திருப்பி தரப்படும்.

இந்த கட்டணங்கள், விலைவாசியுடன் தொடர்புடையவை என்று கூறப்பட்டுள்ளது. அதனால், ஆண்டுக்கு ஆண்டு மாறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமையலறையில் நிர்வாணமாக இருந்தவர் பணத்துடன் மாயம்!

0

தனமல்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, அளுத்கோட  தச்சு பாடசாலைக்கு அருகில் உள்ள வாடகை வீடொன்றுக்குள் நிர்வாணமாக நுழைந்த ஒருவர்  19,000 ரூபாய்  பணத்தை திருடிச் சென்றுள்ள சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அன்று  இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டார் தங்கள் இரண்டு குழந்தைகளுடன், வேலை வசதிக்காக இந்த வீட்டில் வசித்து வருவதுடன் திங்கட்கிழமை (07) அன்று, அனைவரும்  , இரவு உணவு சாப்பிட்டு, புலமைப்பரிசில் தேர்வுக்கு வரவிருந்த மூத்த மகனுக்கு பாடம் சொல்லி விட்டு, இரவு 11 மணியளவில் தாய் படுக்கைக்குச் சென்றுள்ளார்.

மறுநாள்  அதிகாலை 1:45 மணியளவில், இளைய மகனுக்கு ஏற்பட்ட தாகத்தையடுத்து தண்ணீர் குடிப்பதற்காக சமையலறைக்குச் சென்ற போது அடையாளம் தெரியாத ஒருவர் கையில் இரண்டு கருப்பு பைகளுடன் நிர்வாணமாக இருப்பதைக் கண்டு சிறுவன் அலறியதாகவும் அலறல் சத்தத்தை கேட்ட  பெற்றோர் உடனடியாக வந்து வீடு முழுவதும் தேடி பார்த்தபோதும் மர்ம நபரை கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

பின்னர் வீட்டை சோதனையிட்டு பார்த்த போது  படுக்கையறைக்கு அடுத்த அலமாரியில் துணிகள் கலைந்து கிடப்பதைக் கண்டுள்ளதுடன் அதிலிருந்து   19,000 ரூபாய் பணமும் காணாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது.   

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை தனமல்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

கோவை குண்டுவெடிப்பு: 28 ஆண்டுகளுக்கு பின் டெய்லர் ராஜா சிக்கினார்!

0

கோவையில் 1998ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான டெய்லர் ராஜா, 28 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (ஜூலை 10) சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்டார்.

கோவையில், 1998ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்துக்கு வந்திருந்த பாரதிய ஜனதா கட்சியின்  மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, ஆர்.எஸ்.புரம் டி.பி.,ரோடு சந்திப்பில் பேச இருந்த மேடைக்கு அருகே குண்டு வெடித்தது. தொடர்ந்து, கோவையில், 14 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.

அதில், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என, 58 பேர் கொல்லப்பட்டனர்; 231 பேர் படுகாயம் அடைந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நாட்டை உலுக்கிய இச்சம்பவத்தை விசாரிக்கும் வழக்கு, கோவை மாநகர பொலிஸிடம் இருந்து, சிறப்பு புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.

விசாரணைக்கு பின், தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்க நிறுவனர் பாஷா உட்பட, 166 பேரை பொலிஸார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய பலரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் ஊடாக தண்டிக்கப்பட்டனர். இன்னும் சிலர் சிறையில் உள்ளனர். எனினும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவர் மட்டும் பொலிஸில்  சிக்காமல் தலைமறைவாகி விட்டனர்.

இந்நிலையில், இன்று (ஜூலை 10) முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான டெய்லர் ராஜா, 28 ஆண்டுகளுக்குப் பிறகு சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்டார். இன்று டைலர் ராஜாவை பொலிஸார்  கோவை அழைத்து வருகின்றனர்.

இதையொட்டி கோவை மாநகரில்  பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இருந்தும் பொலிஸார் பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

பொரளையில் துப்பாக்கி சூடு ; நபர் கைது!

0

பொரளை பகுதியில் T56 துப்பாக்கியால் சுட்டு கொலை முயற்சிகுற்றத்திற்கு உதவிய மற்றும் உடந்தையாகஇருந்த சந்தேக நபர் புதன்கிழமை (9) அன்று வெல்லம்பிட்டிய பகுதியில் கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் நிக்கவெரட்டியவைச் சேர்ந்த 35 வயதுடையவர்.

சந்தேகநபர் 15 கிராம் 180 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டார். 

இருட்டு வீதியில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு!

0

வேறு இடத்தில்  கொலை செய்யப்பட்டு வீசப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இளைஞனின் சடலம் வியாழக்கிழமை (10) கண்டெடுக்கப்பட்டதாக ஹோமாகம பொலிஸ் தெரிவித்துள்ளது.

சுமார் 35 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞனின் தலையில் ஆயுதத்தால் தாக்கப்பட்டதற்கான காயம் இருப்பதாகவும், கழுத்தில் சிறிது வீக்கம் இருப்பதாகவும், கழுத்துக்கு அருகில் இரத்தக் கறை இருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்னும் திறக்கப்படாத தொடர்புடைய மாற்றுப் பாதை இரவில் மிகவும் இருட்டாக இருப்பதால், ஒரு வாகனத்தில் உடலை எடுத்துச் சென்று, வீதியோரத்தில் நிறுத்தி, இந்த இடத்தில் வீசியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மாணவிக்கு கான்ஸ்டபிள் கொடுத்த காதல் கடிதம்!

0

இன்னும் சில வருடங்களில் பணியிலிருந்து ஓய்வு பெறப்போகும் 55 வயதான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், பாடசாலைக்கு பரீட்சை  எழுத வந்த மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்தது மட்டுமல்லாமல், கூடவே ரோஜாப்பூ மற்றும் தனது தனிப்பட்ட தொலைபேசி எண்ணையும் அந்த மாணவியிடம் கான்ஸ்டபிள் வழங்கியமை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவின் ஜார்க்கண்ட்  மாநிலத்தின் சத்ரா மாவட்டத்திலேயே இடம்பெற்றுள்ளது. 

சத்ரா பெண்கள் உயர்நிலைப் பாடசாலையில் 12ஆம் வகுப்பு பரீட்சை நடைபெற்ற போது, அங்கு பாதுகாப்பு பணிக்காக சென்ற கான்ஸ்டபிள் இந்த செயலை செய்துள்ளார். 

சுக்தேவ் மேத்தா என்ற அடையாளம் காணப்பட்டுள்ள அந்த பொலிஸ் காவலர், பாடசாலையில் பரீட்சை நடைபெற்று வரும் நிலையில், சிறுமியை அணுகி அவருக்கு சிவப்பு நிற ரோஜாப்பூவுடன் ஒரு கடிதத்தையும் கொடுத்துள்ளார்.

 அந்தக் கடிதத்தில் தன்னுடைய தொலைபேசி எண்ணையும் எழுதியுள்ளார். இதை படித்துப் பார்த்த அந்த மாணவி மனதளவில் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த விவரங்கள் அனைத்தும் காவலர் மீது மாணவி கொடுத்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்ததை ஜீரணிக்க முடியாமல் தவித்த மாணவி, பரீட்சையை பாதியிலேயே முடித்துவிட்டு வீடு திரும்பியதாக கூறப்படுகின்றது. மனமுடைந்த மாணவி பாடசாலையில் நடந்த சம்பவத்தை தன் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். 

உடனடியாக சிறுமியின் பெற்றோர் மாணவியை அழைத்துக்கொண்டு உள்ளூர் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று, கான்ஸ்டபிளுக்கு எதிராக புகார் அளித்துள்ளனர்.

 ஆனால், பொலிஸ் தரப்பில் இன்னும் முறையாக வழக்கு பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. 

பாடசாலையில் பரீட்சை எழுதிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாகவும், அங்குதான் மேத்தா பணியில் இருந்ததாகவும் மாணவி கூறியுள்ளார்.

வேலைக்குச் சேர்ந்தார் பிரிட்டனின் முன்னாள் பிரதமர்!

0

பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் கோல்ட்மேன் சாக்ஸில் மீண்டும் மூத்த ஆலோசகராக இணைந்துள்ளார். இது அவர் தனது வாழ்க்கையைத் தொடங்கிய நிதித் துறைக்குத் திரும்புவதைக் குறிக்கிறது.

 கன்சர்வேடிவ் கட்சியின் வரலாற்றுத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து 2024 ஜூலையில் ராஜினாமா செய்த சுனக், உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதாரம் குறித்த தனது நுண்ணறிவுகளுடன் முதலீட்டு வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனை வழங்குவதில் பகுதிநேரமாகப் பணியாற்ற உள்ளார்.

கோல்ட்மேன் சாக்ஸ் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டேவிட் சாலமன், சுனக்கை மீண்டும் வரவேற்றார்.

முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் உலகெங்கிலும் உள்ள நிறுவனத்தின் ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் நிறுவனத்தின் கலாச்சாரத்திற்கும் பங்களிப்பார் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வரிவிதிப்பு: ஜனாதிபதி அவசர கலந்துரையாடல்!

0

அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள முக்கிய அதிகாரிகளுடன் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதி செயலகத்தில் ஒரு கலந்துரையாடலில், வியாழக்கிழமை (10) ஈடுபட்டார்.   

முன்மொழியப்பட்ட அமெரிக்க இறக்குமதி வரிகள் தொடர்பான இலங்கையின் நிலைப்பாடு குறித்து இந்தக் கூட்டம் கவனம் செலுத்தியது, இது ஆரம்பத்தில் இலங்கை ஏற்றுமதிகளில் 44 சதவீதத்தை பரிந்துரைத்தது, பின்னர் அது 30 சதவீதமாக குறைக்கப்பட்டது. 

புதுடெல்லியில் நிலநடுக்கம்!

0

ஹரியானாவின் ஜஜ்ஜருக்கு அருகே இன்று வியாழக்கிழமை (10) காலையில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் கடுமையான
நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இன்று காலை 9.04 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ஹரியானாவின் ஜஜ்ஜருக்கு வடகிழக்கே 3 கிமீ தொலைவிலும், டெல்லிக்கு மேற்கே 51 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஹரியானாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில், இன்று காலை கடுமையான நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது.

இதனால் மின்விசிறிகள் மற்றும் பிற வீட்டுப் பொருட்கள் குலுங்கியதால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். நொய்டா பகுதியிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

ஹரியானாவில், குருகிராம், ரோஹ்தக், தாத்ரி, ஃபரிதாபாத், சோனிபட் மற்றும் பகதூர்கர் ஆகிய இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

மேலும், ஜஜ்ஜாரில் இருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் மேற்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள மீரட் மற்றும் ஷாம்லி வரை நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நிலநடுக்கம் ஏற்பட்டால், மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும், அந்தச் சமயத்தில் படிக்கட்டுகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை ஆலோசனை வழங்கியுள்ளது.

சிக்கனமாக பயன்படுத்துங்கள்!

0

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வறட்சியான காலநிலை நிலவுவதால், நீர் நிலைகளின் நீர் மட்டம் குறைவடைந்து வருகின்றதுஃ

இதன் காரணமாக, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை, பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், வெப்பம் காரணமாக மக்களின் நீர்த்தேவையும் அதிகரித்துள்ளது.

எனவே, குடிநீர் விநியோகம் குறைவடைந்துள்ளதன் காரணமாக அனைவரும் அத்தியாவசிய மற்றும் அன்றாட தேவைகளுக்கு மாத்திரம் நீரை பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.