30 C
Colombo
Sunday, July 13, 2025
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe
Home Blog Page 9

பொரளையில் துப்பாக்கி சூடு ; நபர் கைது!

0

பொரளை பகுதியில் T56 துப்பாக்கியால் சுட்டு கொலை முயற்சிகுற்றத்திற்கு உதவிய மற்றும் உடந்தையாகஇருந்த சந்தேக நபர் புதன்கிழமை (9) அன்று வெல்லம்பிட்டிய பகுதியில் கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் நிக்கவெரட்டியவைச் சேர்ந்த 35 வயதுடையவர்.

சந்தேகநபர் 15 கிராம் 180 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டார். 

இருட்டு வீதியில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு!

0

வேறு இடத்தில்  கொலை செய்யப்பட்டு வீசப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இளைஞனின் சடலம் வியாழக்கிழமை (10) கண்டெடுக்கப்பட்டதாக ஹோமாகம பொலிஸ் தெரிவித்துள்ளது.

சுமார் 35 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞனின் தலையில் ஆயுதத்தால் தாக்கப்பட்டதற்கான காயம் இருப்பதாகவும், கழுத்தில் சிறிது வீக்கம் இருப்பதாகவும், கழுத்துக்கு அருகில் இரத்தக் கறை இருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்னும் திறக்கப்படாத தொடர்புடைய மாற்றுப் பாதை இரவில் மிகவும் இருட்டாக இருப்பதால், ஒரு வாகனத்தில் உடலை எடுத்துச் சென்று, வீதியோரத்தில் நிறுத்தி, இந்த இடத்தில் வீசியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மாணவிக்கு கான்ஸ்டபிள் கொடுத்த காதல் கடிதம்!

0

இன்னும் சில வருடங்களில் பணியிலிருந்து ஓய்வு பெறப்போகும் 55 வயதான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், பாடசாலைக்கு பரீட்சை  எழுத வந்த மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்தது மட்டுமல்லாமல், கூடவே ரோஜாப்பூ மற்றும் தனது தனிப்பட்ட தொலைபேசி எண்ணையும் அந்த மாணவியிடம் கான்ஸ்டபிள் வழங்கியமை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவின் ஜார்க்கண்ட்  மாநிலத்தின் சத்ரா மாவட்டத்திலேயே இடம்பெற்றுள்ளது. 

சத்ரா பெண்கள் உயர்நிலைப் பாடசாலையில் 12ஆம் வகுப்பு பரீட்சை நடைபெற்ற போது, அங்கு பாதுகாப்பு பணிக்காக சென்ற கான்ஸ்டபிள் இந்த செயலை செய்துள்ளார். 

சுக்தேவ் மேத்தா என்ற அடையாளம் காணப்பட்டுள்ள அந்த பொலிஸ் காவலர், பாடசாலையில் பரீட்சை நடைபெற்று வரும் நிலையில், சிறுமியை அணுகி அவருக்கு சிவப்பு நிற ரோஜாப்பூவுடன் ஒரு கடிதத்தையும் கொடுத்துள்ளார்.

 அந்தக் கடிதத்தில் தன்னுடைய தொலைபேசி எண்ணையும் எழுதியுள்ளார். இதை படித்துப் பார்த்த அந்த மாணவி மனதளவில் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த விவரங்கள் அனைத்தும் காவலர் மீது மாணவி கொடுத்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்ததை ஜீரணிக்க முடியாமல் தவித்த மாணவி, பரீட்சையை பாதியிலேயே முடித்துவிட்டு வீடு திரும்பியதாக கூறப்படுகின்றது. மனமுடைந்த மாணவி பாடசாலையில் நடந்த சம்பவத்தை தன் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். 

உடனடியாக சிறுமியின் பெற்றோர் மாணவியை அழைத்துக்கொண்டு உள்ளூர் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று, கான்ஸ்டபிளுக்கு எதிராக புகார் அளித்துள்ளனர்.

 ஆனால், பொலிஸ் தரப்பில் இன்னும் முறையாக வழக்கு பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. 

பாடசாலையில் பரீட்சை எழுதிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாகவும், அங்குதான் மேத்தா பணியில் இருந்ததாகவும் மாணவி கூறியுள்ளார்.

வேலைக்குச் சேர்ந்தார் பிரிட்டனின் முன்னாள் பிரதமர்!

0

பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் கோல்ட்மேன் சாக்ஸில் மீண்டும் மூத்த ஆலோசகராக இணைந்துள்ளார். இது அவர் தனது வாழ்க்கையைத் தொடங்கிய நிதித் துறைக்குத் திரும்புவதைக் குறிக்கிறது.

 கன்சர்வேடிவ் கட்சியின் வரலாற்றுத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து 2024 ஜூலையில் ராஜினாமா செய்த சுனக், உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதாரம் குறித்த தனது நுண்ணறிவுகளுடன் முதலீட்டு வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனை வழங்குவதில் பகுதிநேரமாகப் பணியாற்ற உள்ளார்.

கோல்ட்மேன் சாக்ஸ் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டேவிட் சாலமன், சுனக்கை மீண்டும் வரவேற்றார்.

முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் உலகெங்கிலும் உள்ள நிறுவனத்தின் ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் நிறுவனத்தின் கலாச்சாரத்திற்கும் பங்களிப்பார் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வரிவிதிப்பு: ஜனாதிபதி அவசர கலந்துரையாடல்!

0

அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள முக்கிய அதிகாரிகளுடன் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதி செயலகத்தில் ஒரு கலந்துரையாடலில், வியாழக்கிழமை (10) ஈடுபட்டார்.   

முன்மொழியப்பட்ட அமெரிக்க இறக்குமதி வரிகள் தொடர்பான இலங்கையின் நிலைப்பாடு குறித்து இந்தக் கூட்டம் கவனம் செலுத்தியது, இது ஆரம்பத்தில் இலங்கை ஏற்றுமதிகளில் 44 சதவீதத்தை பரிந்துரைத்தது, பின்னர் அது 30 சதவீதமாக குறைக்கப்பட்டது. 

புதுடெல்லியில் நிலநடுக்கம்!

0

ஹரியானாவின் ஜஜ்ஜருக்கு அருகே இன்று வியாழக்கிழமை (10) காலையில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் கடுமையான
நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இன்று காலை 9.04 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ஹரியானாவின் ஜஜ்ஜருக்கு வடகிழக்கே 3 கிமீ தொலைவிலும், டெல்லிக்கு மேற்கே 51 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஹரியானாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில், இன்று காலை கடுமையான நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது.

இதனால் மின்விசிறிகள் மற்றும் பிற வீட்டுப் பொருட்கள் குலுங்கியதால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். நொய்டா பகுதியிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

ஹரியானாவில், குருகிராம், ரோஹ்தக், தாத்ரி, ஃபரிதாபாத், சோனிபட் மற்றும் பகதூர்கர் ஆகிய இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

மேலும், ஜஜ்ஜாரில் இருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் மேற்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள மீரட் மற்றும் ஷாம்லி வரை நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நிலநடுக்கம் ஏற்பட்டால், மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும், அந்தச் சமயத்தில் படிக்கட்டுகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை ஆலோசனை வழங்கியுள்ளது.

சிக்கனமாக பயன்படுத்துங்கள்!

0

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வறட்சியான காலநிலை நிலவுவதால், நீர் நிலைகளின் நீர் மட்டம் குறைவடைந்து வருகின்றதுஃ

இதன் காரணமாக, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை, பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், வெப்பம் காரணமாக மக்களின் நீர்த்தேவையும் அதிகரித்துள்ளது.

எனவே, குடிநீர் விநியோகம் குறைவடைந்துள்ளதன் காரணமாக அனைவரும் அத்தியாவசிய மற்றும் அன்றாட தேவைகளுக்கு மாத்திரம் நீரை பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது. 

பால் மாவின் விலை அதிகரிப்பு!

0

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், 400 கிராம் பால் மாவின் விலை ரூ.100-ஆலும், 1 கிலோகிராம் பால்மாவி விலை ரூ.250-ஆலும் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் வியாழக்கிழமை(09) உறுதிப்படுத்தியது.

ஆபத்தான குற்றவாளி ’பத்மே’ மலேசியாவில் கைது?

0

நாட்டின் மிகவும் ஆபத்தான குற்றவாளியாகக் கருதப்படும் தற்போதைய பாதாள உலகத் தலைவரான கெஹல்பத்தர பத்மே, மலேசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிப்பதாக  பொலிஸ் தலைவர் பிரியந்த வீரசூரிய கூறியுள்ளார்.

கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சாலிந்த மற்றும் ஹரக்கட்டாவின் மனைவியுடன் கைது செய்யப்பட்டதாகவும் கெஹல்பத்தர பத்மே மற்றும் பிற பாதாள உலக நபர்கள் போலி கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி மலேசியா வழியாக தாய்லாந்திற்கு தப்பிச் செல்ல முயன்றபோது மலேசிய பொலிஸாரால் பிடிபட்டுள்ளனர்  என  மலேசிய செய்திகளில் தெரிவிக்கப்படுகின்றன.

இது தொடர்பாக பொலிஸ் தலைவர் பிரியந்த வீரசூரிய விசாரித்தபோது,
கெஹல்பத்தர பத்மே மற்றும் மூன்று பேரை மலேசிய பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், ஆனால், பொலிஸார் இன்னும் அதை உறுதிப்படுத்தவில்லை என்றும் இது தொடர்பாக மலேசிய பொலிஸாருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் பிரியந்த வீரசூரிய கூறியுள்ளார். 

கொழும்பில் உள்ள அளுத்கடே நீதிமன்ற அறைக்குள் பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவா சுட்டுக் கொல்லப்பட்டதற்குப் பின்னால் உள்ள மூளையாக செயல்பட்டவர் கெஹல்பத்தர பத்மே என்று நம்பப்படுகிறது.

இந்தத் தாக்குதலுக்கு கமாண்டோ சாலிந்த தலைமை தாங்கினார்,

மேலும், சாலிந்த என்ற பாதாள உலக தலைவர் பத்மேவின்  கும்பலில் சித்தாந்தவாதியாகவும் நம்பப்படுவதாக பொலிஸ் தரப்பில்  கூறப்படுகின்றது.

பத்மேவுடன் கைது செய்யப்பட்ட மற்ற பாதாள உலகக் குண்டர்களில் சாலிந்தவும் ஒருவர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

அத்துடன், கம்பஹா பாதாள உலகத்திற்காக கணேமுல்ல சஞ்சீவவிற்கும் கெஹெல்பத்தர பத்மேவிற்கும் இடையே நீண்டகால பகை இருந்தது.

இந்த மோதல்களில் இரு தரப்பிலிருந்தும் 20க்கும் மேற்பட்ட பாதாள உலக உறுப்பினர்களும் அவர்களது நெருங்கிய கூட்டாளிகளும் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

அனுரவின் பெயரை தவறாக பயன்படுத்திய டிரம்ப்!

0

இலங்கை ஏற்றுமதிகளுக்கு 30 சதவீத வரி விதிப்பை அறிவிக்கும் கடிதத்தில், தற்செயலாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை ‘அருண’ குமார திசாநாயக்க என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், குறிப்பிட்டுள்ளார்.

 வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ கடித தலைப்பில் ஜூலை 9 திகதியிட்டு அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தில், இலங்கை ஜனாதிபதியின் பெயரில் தவறான எழுத்துப்பிழை உள்ளது.

 இது சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது, பல பயனர்கள் இந்தத் தவறைச் சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்துள்ளனர்.