நாட்டின் பல பகுதிகளிலும் இன்று புனித தலைப்பிறை தென்பட்டுள்ளதைத் தொடர்ந்து நாளைய தினம் ரமழான் பெருநாள் கொண்டாடப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாயல் பிறைக்குழு அறிவித்துள்ளது.
ரமழான் மாதத்திற்கான புனித தலைப்பிறை பார்க்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாயலில் இன்று மாலை இடம்பெற்றபோதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.