2034ஆம் ஆண்டு FIFA உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை சவூதி அரேபிய இராச்சியத்தில் நடாத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டு அரசாங்கம், மக்கள் மற்றும் சம்மந்தப்பட்ட அமைச்சுக்கள் தயாராகி வருவதாகவும் அன்மைக்காலங்களில் செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தமை யாவரும் அறிந்ததே.
சவூதி அரசாங்கம் தமது இலட்சிய திட்டமான விஷன் 2030 திட்டத்தின் கீழ் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் அந்நாட்டில் அபிவிருத்திகளை மும்முரமாக செய்துவருகிறது. இவ்வபிவிருத்திகள் சுற்றுலா, பொருளாதாரம், தொழில்நுட்பம், உட்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி, கலாச்சாரம் மற்றும் விளையாட்டு போன்ற சகல துறைகளையும் இலக்குவைத்ததாக அமைகின்றன.
அந்த வகையில் 2034 FIFA கால்பந்தாட்ட உலகக் கிண்ண போட்டிகளை நடாத்துவதற்கான உத்தியோகபூர்வ ஏலத்தில் சவூதி தனது ஏலப்புத்தகத்தை சமர்பித்துள்ளது. அதில் ஐந்து முக்கிய நகரங்களான ரியாத், ஜித்தா, அல்கொபார், அபா மற்றும் NEOM (இது சவூதியின் மிக முக்கியமான அதிநவீன நகர திட்டங்களில் ஒன்றாகும்) போன்ற நகரங்களில் போட்டிகளை நடாத்துவதற்காக முன்மொழிந்துள்ளது.