IMF கடன் திட்டம் குறித்து தெளிவுப்படுத்தும் கலந்துரையாடல் 30ஆம் திகதி!

0
145

சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் அங்கீகாரம் குறித்து இலங்கையின் இருதரப்பு கடன் வழங்குநர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்குத் தெளிவுப்படுத்தும் கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது.

நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்த நாட்டின் அனைத்து கடன் வழங்குநர்களுடனும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் கலந்துரையாடல்களை தொடர எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் இது தொடர்பான கலந்துரையாடல்களில் பங்கேற்க உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.