சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று (02) இரவு ஜூம் வழியாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, இலங்கை எதிர்பார்க்கும் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதி மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நீண்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் நிதி வசதி தொடர்பான அனைத்து தரப்பினரிடமிருந்தும் தற்போது சாதகமான மற்றும் நம்பிக்கையான பின்னணி உருவாக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது..
அண்மையில் சீனப் பிரதமருடனான கலந்துரையாடலின் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் இவ்வாறு ஜனாதிபதியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், “புளூம்பெர்க்” செய்திச் சேவை, கடன் நெருக்கடியில் உள்ள மாநிலங்களுக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கும் பலதரப்பு முயற்சிகளில் பங்கேற்க சீனா தயாராக இருப்பதாக, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனரிடம் சீனப் பிரதமர் கூறியதாக சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.