28 C
Colombo
Saturday, April 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

IPL இல் அதிக சிக்ஸர்கள் அடித்த இளம் வீரர்!

ஐபிஎல் 2020 போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்துள்ள வீரர்களின் பட்டியலில் மும்பை வீரர் இஷான் கிஷன் முதலிடம் பிடித்துள்ளார்.

ஐபிஎல் போட்டியின் தகுதிச்சுற்று (குவாலிஃபயர் 1) ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி கபிடல்ஸை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது.

டுபாயில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் ஆடிய மும்பை 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 200 ஓட்டங்கள் அடித்தது. அடுத்து ஆடிய டெல்லி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ஓட்டங்களே எடுத்தது. மும்பை பந்துவீச்சாளர் பும்ரா ஆட்டநாயகன் ஆனார்.

இந்த ஆட்டத்தில் 22 வயது மும்பை வீரர் இஷான் கிஷன் 30 பந்துகளில் 3 சிக்ஸர்கள்இ 4 பவுண்டரிகளுடன் 55 ஓட்டங்கள் எடுத்தார்.

இதை அடுத்து ஐபிஎல் 2020 போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இதுவரை 29 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

ஐபிஎல் 2020 போட்டியில் அதிக சிக்ஸர்கள்

இஷான் கிஷன் – 29 சிக்ஸர்கள்
சஞ்சு சாம்சன் – 26 சிக்ஸர்கள்
பாண்டியா – 25 சிக்ஸர்கள்
பூரன் – 25 சிக்ஸர்கள்
மார்கன் – 24 சிக்ஸர்கள்

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles