25 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

O/L பரீட்சைக்கான அனைத்து வகுப்புகளுக்கும் இன்று முதல் தடை

2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான கல்வி வகுப்புகளை நடத்துவதற்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வகுப்புகளை நடத்துதல்இ பயிற்சிப்பட்டறைகள் , கருத்தரங்குகள்,விரிவுரைகள்,மாதிரி தாள்களை அச்சிடுதல், சுவரொட்டிகள்,பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள் ஒட்டுதல் அல்லது அச்சு அல்லது சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்தல் போன்றவற்றுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விதிமீறல்கள் தொடர்பில் பொது மக்கள் பொலிஸ் அல்லது திணைக்களத்திற்கு அறிவிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் 119 பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்தை அல்லது 0112 421 111 ஊடாக தலைமையகத்தை தொடர்பு கொள்ளலாம்.

1911 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவும் அல்லது 0112 784 208 , 0112 784 537 ஊடாகவும் பரீட்சைகள் திணைக்களத்திற்கு முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும்.

2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே மாதம் 29 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 8 ஆம் திகதி வரை 3568 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles