இலங்கையின் உயர் தர பாலுற்பத்தியாளரான Pelwatte Dairy Industries, தனது தயாரிப்புகள் பலவற்றை தற்போது நாட்டின் முன்னணி சுப்பர்மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வந்துள்ளது.
பால், யோகர்ட், ஐஸ் கிறீம் உட்பட தனது ஆரோக்கியமான, புதிய தயாரிப்பு வரிசைகளுக்கு நன்கறியப்பட்ட இந் நிறுவனம் தனது பூண்டு பட்டர், உப்பு சேர்க்கப்படாத பட்டர் மற்றும் நெய் வரிசையை Arpico, Keells, SPAR மற்றும் Softlogic விற்பனையகங்களில் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
“எமது பல தரப்பட்ட தயாரிப்புகளை காட்சிப்படுத்த நாட்டில் உள்ள முன்னணி சுப்பர்மார்க்கெட்டுக்களுடன் கைகோர்த்தமை தொடர்பில் நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம்.
எமது தயாரிப்புகளும் புதிய பாலின் போஷாக்கு நிறைந்தவை என்பதுடன் காப்புப்பொருள்கள் அற்றவை. Pelwatteநெய் என்பது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிடித்த எமது தயாரிப்புகளில் ஒன்றாகும். இது உட்பட மேலும் பல தயாரிப்புகளை சுப்பர்மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வருகின்றமை தொடர்பில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளோம்,” என Pelwatte Dairy Industries இன் முகாமைத்துவ பணிப்பாளர் அக்மால் விக்ரமநாயக்க தெரிவித்தார். Pelwatte Dairy இன் 230 கிராம் நெய் ஜாடிகளை எந்தவொரு Keells இலும் கொள்வனவு செய்துகொள்ள முடியும் என்பதுடன் பூண்டு பட்டர் மற்றும் உப்பு சேர்க்கப்பட்ட பட்டர் ஆகியவற்றை நாடுபூராகவும் உள்ள அனைத்து Cargills விற்பனையகங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும். மேலும், Lanka Sathosa சுப்பர்மார்க்கெட்டுகளில் Pelwatte இன் ஐஸ் கிறீம் வரிசை, யோகர்ட் வரிசை மற்றும் உப்பு சேர்க்கப்பட்ட, உப்பு சேர்க்கப்படாத பட்டர் வகைகளும் விற்பனைக்கு வந்துள்ளன.
மேலும் இலங்கையின் முன்னணி சுப்பர்மார்க்கெட்டுகளுடன் இணைந்து Pelwatte Dairy, செலுத்தும் பணத்துக்கு ஏற்ற பெறுமதியை வழங்கும் பல டீல்கள் இந்த ஒக்டோபர் வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த கவர்ச்சிகரமான கழிவுகளானது, Keells விற்பனையகங்களில் உப்பு சேர்க்கப்பட்ட பட்டரின் 200 கிராம் பொதிக்கு ரூபா 60 தள்ளுபடியையும், Arpico விற்பனையகங்களில் உப்பு சேர்க்கப்படாத பட்டர் 200 கிராம் பொதிக்கு ரூபா 41 தள்ளுபடியும், Sirilak SUPER – கொஸ்வத்தையில் ஐஸ் கிறீம் தவிர்ந்த குளிரூட்டப்பட்ட தயாரிப்புகளுக்கு உச்சபட்ச சில்லறை விலையில் 10% தள்ளுபடியையும் பெற்றுக்கொள்ள முடியும்.
தரம், சுவை என்பனவற்றுக்கான Pelwatte Dairyஇன் உறுதியான அர்ப்பணிப்பு அதன் தயாரிப்புகளில் பிரதிபலிப்பதுடன், வாடிக்கையாளர்களுக்கு உயர்ந்த பட்ச பெறுமதியை இவை வழங்குகின்றன. எமது எந்தவொரு தயாரிப்பிலும் எவ்வித காப்புப்பொருள்களும் சேர்க்கப்படுவதில்லை, உதாரணமாக Pelwatte பட்டரைக் குறிப்பிடுவதாயின், இது முற்றிலும் இயற்கையானதாகும், ஏனெனில் இது கொழுப்பு வீதத்தைக் கட்டுப்படுத்த தரப்படுத்தல் செயன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றது.
Pelwatte இன் ஐஸ்கிறீம் வரிசையானது இலங்கையின் தேசிய தர நிர்ணய நிறுவகத்தின் (SLS) தரநிலைகளுக்கு இணங்கி தயாரிக்கப்படுகின்றது. இந்த விசுவாசமான அர்ப்பணிப்பு நிச்சயமாக நிறுவனத்தினை ஏனையோரிடமிருந்து வேறுபடுத்தும் காரணியென்பதுடன், நாட்டில் மிகவும் விரும்பப்படும் பால் வர்த்தகநாமமாக மாற்றியுள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று திடீரென அதிகரித்துள்ளமையை பற்றி விக்ரமநாயக்க கருத்து தெரிவிக்கையில்: “அண்மைய நிகழ்வுகளை கருத்தில் கொண்டு,Pelwatte பால் தொழிற்துறையானது நாம் எமது தேசத்தை ஆதரிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். இந்த ஆண்டின் ஆரம்பத்தில் முடக்கல் நிலையின் போது இலவசமாக வீட்டுக்கு வீடு விநியோக சேவையை வழங்கியதுடன், தொற்றுநோயை சமாளிக்க தேசத்திற்கு உதவ பல சமூக பொறுப்புணர்வு மற்றும் நுகர்வோர் அணுகல் திட்டங்களையும் முன்னெடுத்தது. தொற்றாளர்களின் எண்ணிக்கை உயரும் பட்சத்தில், நாம் எமது இந்த நாட்டுக்கும், பாலுற்பத்தித் துறைக்கும் எமது அர்ப்பணிப்பை உறுதிசெய்வதுடன், எமது தயாரிப்பு நடவடிக்கைகளானது தொடர்ந்து உட்சபட்ச பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கையுடன் முன்னெடுக்கப்படுமென்பதை உறுதி செய்வோம், என்றார்.
உள்ளூர் பால் விவசாயிகளின் சமூக-பொருளாதார நிலையை உயர்த்தும் அதே வேளையில் நாட்டின் உள்நாட்டு பால் தேவையை பூர்த்தி செய்வதில் Pelwatte Dairy எப்போதும் தீவிரமாக கவனம் செலுத்துகிறது. பால் உற்பத்தியில் நாட்டின் தன்னிறைவு முதன்மையான நோக்கமாக இருக்கும்போது, Pelwatte Dairy பண்ணையாளர்கள், அவர்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் குடும்பங்களை எண்ணற்ற வழிகளில் ஆதரிக்கிறது – அவர்களை வலுவூட்டி, அவர்களின் வளர்ச்சியையும் தேசத்தின் வளர்ச்சியையும் வழிநடத்துகிறது.
பால் மற்றும் தொடர்புடைய தயாரிப்புகளின் உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதில் இலங்கைக்கு பெரும் ஆற்றல் உள்ளது. அந்த முயற்சியில் தேசத்தை வழிநடத்தும் உறுதிமொழியை Pelwatte Dairy Industries தொடர்ந்து நிலைநிறுத்தும்.