T20 உலகக் கிண்ணத் தொடருக்கான இடங்கள் அமெரிக்காவில் தயார்!

0
73
2024 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடர் இடம்பெறவுள்ள அமெரிக்காவின் மூன்று முக்கிய இடங்களை சர்வதேச கிரிக்கட் பேரவை உறுதி செய்துள்ளது.அதன்படி, டல்லாஸ், மியாமி மற்றும் நியூயோர்க் ஆகிய இடங்களில் உலகக்கிண்ணத் தொடர் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை அமெரிக்கா முதன்முறையாக அடுத்த ஆண்டு நடத்த உள்ளது.ஆண்டு நவம்பர் மாதம் சர்வதேச கிரிக்கட் பேரவை, 2024 ஆம் ஆண்டு இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை நடத்துவதற்கான உரிமையை அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு வழங்கியது.இந்தநிலையில், குறித்த உலகக் கிண்ணத் தொடர் இடம்பெறவுள்ள மூன்று இடங்களை சர்வதேச கிரிக்கட் பேரவை இன்று உறுதி செய்துள்ளது.