VAT வரி அறவிடப்படும் பொருட்களின் பட்டியல் இதோ

0
168

ஜனவரி ஒன்று முதல் பெறுமதி சேர் வரி (VAT) அறவிடப்படும் பொருட்களின் பட்டியலை நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று பாராளுமன்றில் சமர்ப்பித்தார்.

சமையல் எரிவாயு, பெற்றோல், டீசல் உள்ளிட்டவைகளும் இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இரசாயன உரங்களையும் இந்த பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டில் தயாரிக்கப்படும் பால்மா, கையடக்க தொலைபேசிகள், வாகனங்கள், விளையாட்டு உபகரணங்கள், மின்சாதன பொருட்கள், உயர் தொழில்நுட்ப மருத்துவ சாதனங்கள், உள்நாட்டில் தயாரிக்கபடும் ஆபரணங்கள் உள்ளிட்டவைகளுக்கும் பெறுமதி சேர் வரி அறவிடப்படவுள்ளது.

இதேவேளைஇ பெறுமதி சேர் வரி (VAT) திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாவது மற்றும் மூன்றாவது வாசிப்புகள் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.