WTC இறுதிப் போட்டி வாய்ப்பை அதிகரிக்கும் முனைப்பில் இலங்கை அணி!

0
54

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலை காலி சர்வதேச விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி தற்போது துடுப்பெடுத்தாடி வருகிறது.

நியூசிலாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கிடையில் இத்தொடரில் முன்னதாக இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி 63 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இரண்டு போட்டிகள் கொண்ட இத் தொடரில் 1 ற்கு 0 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றது.

இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் இலங்கை அணி வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஸிப் தொடரின் இறுதிப் போட்டிக்குச் செல்வதற்குரிய வாய்ப்பு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.