அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையத்தின் தூதர் பதவியிலிருந்து ஏஞ்சலினா ஜோலி விலகல்

0
190

அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையத்தின் சிறப்பு தூதர் பதவியில் இருந்து ஏஞ்சலினா ஜோலி திடீரென விலகியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.நா அமைப்பில் 20 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, அகதிகள் மற்றும் உள்ளூர் அமைப்புகளுடன் நேரடியாக ஈடுபடுவதற்கும், தீர்வுகளுக்கான அவர்களின் வாதங்களை ஆதரிப்பதற்கும் நான் மாற்று வழியில் வேலை செய்ய வேண்டிய நேரம் இது என்று உணர்கிறேன்.
அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்களுக்கு ஆதரவாக வரும் ஆண்டுகளில் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என தெரிவித்துள்ளார். ஏஞ்சலினா ஜோலி அகதிகளின் உரிமைகளுக்காக அயராது உழைத்தார் எனவும், அவர் உலகெங்கும் அகதிகளுக்கான விழிப்புணர்வையும் ஆதரவையும் உருவாக்கினார் எனவும் ஐ.நா. பாராட்டியுள்ளது.