அச்சுவேலியில் கையெழுத்துப் போராட்டம்!

0
212

பயங்கரவாத தடைச் சட்டத்தை தடை செய்யக்கோரி கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றைய தினம் யாழ்ப்பாணம் – அச்சுவேலியில் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
மிகவும் மோசமான சட்ட ஏற்பாடுகளை கொண்ட பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ச்சியான கையெழுத்துப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
கிராமங்கள் தோறும் குறித்த கையெழுத்து பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் இன்றைய தினம் காலை அச்சுவேலி பிரதான பேருந்து நிலையத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில்
இடம்பெற்ற கையெழுத்துப் போராட்டத்தில் பலர் கலந்துகொண்டு கையெழுத்துக்களை பதிவு செய்திருந்தனர்.