அடுத்த ஐஜிபி யார்? ;12 கூடுகிறது அரசியலமைப்பு சபை!

0
10

அடுத்த பொலிஸ்மா அதிபர் (ஐஜிபி )பதவி குறித்து முடிவெடுப்பதற்காக அரசியலமைப்பு சபை 12 ஆம் தேதி மீண்டும் கூட உள்ளது. ஜனாதிபதி ஏற்கனவே ஐஜிபி பதவிக்கு பதில் ஐஜிபி பிரியந்த வீரசூரியவின் பெயரை அரசியலமைப்பு சபைக்கு பரிந்துரை செய்துள்ளார். இந்தப் பெயரை பரிசீலிக்க அரசியலமைப்பு சபை வியாழக்கிழமை, 7 ஆம் திகதி கூடியது, ஆனால் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இது குறித்து நாம் விசாரித்தபோது, அரசியலமைப்பு பேரவையில் உறுப்பினர்களின்‌ எண்ணிக்கை குறைவாக இருந்ததால் முடிவு தாமதமானது என்று பாராளுமன்ற செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைத் தொடர்ந்து, ஐஜிபி தேசபந்து தென்னகோன் பதவியில் இருந்து ஜனாதிபதியால் நீக்கப்பட்டார். ஐஜிபி பதவிக்கு பதில் ஐஜிபி பிரியந்த வீரசூரியவின் பெயரை மட்டுமே ஜனாதிபதி அரசியலமைப்பு சபைக்கு முன்மொழிந்துள்ளார். அவர் 2024 செப்டெம்பர் 27, அன்று பதில் ஐஜிபியாக நியமிக்கப்பட்டார்