அதிக விலைக்கு முட்டை விற்பனை – மடக்கிப்பிடித்த நுகர்வோர் அதிகாரசபையின் அதிகாரிகள்!

0
144

மாத்தறையில் விதிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த நிறுவனம் மற்றும் இரண்டு கடைகளுக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

அதன்படி, சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதமும், இரண்டு கடைகளுக்கு 1 இலட்சம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் அதிகாரசபையின் மாத்தறை மாவட்ட காரியாலய அதிகாரிகளால் அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யப்படும் இடங்களை கண்டறியும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த மூன்று வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யப்படும் இடங்களை கண்டறியும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.