அநுராதபுரத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த பஸ் ; ஒருவர் பலி

0
8

அநுராதபுரம் ஜேதவனராமைக்கு அருகில் உள்ள முதியோர் இல்லத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ்ஸில் உறங்கிக் கொண்டிருந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் எம்பிலிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடையவர் ஆவார்.

இந்த பஸ்ஸானது பலாங்கொடையில் இருந்து அநுராதபுரம் பழைய நகரத்திற்கு யாத்திரைக்காக வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.