அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் விடுக்கப்பட்ட அழைப்பு!

0
159

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடர் ஜனாதிபதியினால் 2022 ஓகஸ்ட் 03ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்படவிருப்பதால் அந்நிகழ்வில் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கலந்துகொள்ளுமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை ஆரம்பிப்பது தொடர்பான பின்வரும் ஆவணங்களை பாராளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ( www.parlaiment.lk ) பதிவேற்றம் செய்வதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவந்து ஜனாதிபதியின் அறிவிப்பு உள்ளடங்கிய 2022.07.28ஆம் திகதிய 2290/35 இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தல், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தல் தொடர்பான பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரம் மற்றும் அது தொடர்பான தகவல்களை பாராளுமன்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.