அபகீர்த்தி! ஐ.ம.ச.எம்.பிக்கள் ஐவர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்றுகாலை ஆஜர்!!

0
304

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் குறித்த ஆணைக்குழுவில் இன்றுகாலை முன்னிலையாகியுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் 5 பாராளுமன்ற உறுப்பினர்களை அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காவே அவர்களுக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரட்னவினால் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ, நளின் பண்டார, ஜே.சி. அலவத்துவல, மயந்த திஸாநாயக்க மற்றும் சுஜித் சஞ்சய ஆகியோருக்கு அதற்கான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 6 ஆம் திகதி அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்துவதாக கையூட்டல் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு அதனை வெளிப்படுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.