அமெரிக்க இராஜதந்திரி வெளியிட்ட கருத்துக்கு சீனா பதில்!

0
145

அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலர் விக்டோரியா நுலண்ட் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இலங்கையில் சீனா தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கு சீனா பதில் வழங்கியுள்ளது. இலங்கைக்கான கடன் நிவாரணத்துக்காக, சர்வதேச நாணய நிதிய நிபந்தனை விடயத்தில் சீனா காட்டியுள்ள முனைப்பு போதாது என்று நுலாண்ட் தெரிவித்திருந்தார். இதற்கு பதில் வழங்கிய சீன வெளியுறவு அமைச்சக ஊடகப் பேச்சாளர், உண்மையில் அமெரிக்கா இலங்கைக்கு ஏதாவது செய்ய வேண்டுமானால், தமது நேர்மையை காட்ட வேண்டும் எனவும், அமெரிக்க ராஜதந்திரி கூறியதில் உண்மை இல்லை என்றும் தெரிவித்தார். இலங்கையுடனான சீனாவின் நெருங்கிய ஒத்துழைப்பைக் கண்டு துவண்டு போவதை நிறுத்துமாறும் வாஷிங்டனை, அவர் எச்சரித்துள்ளார்.