உக்ரைனுக்குள் ரஷ்யப் படைகள் நுழைந்தால் பாரிய பேரழிவைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை
விடுத்துள்ளார்.
ரஷ்யா உக்ரைன் விவகாரம் தொடர்பில், வெள்ளைமாளிகையில் நடாத்திய ஊடக சந்திப்பின்போதே அமெரிக்க ஜனாதிபதி
இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
‘உக்ரைன் மீது படையெடுக்கப்பட்டால் அதற்கு முழு பொறுப்பு ரஷ்யா தான். உக்ரைன் மீது படையெடுத்தால் ரஷியா பேரழிவை சந்திக்கும்.
ரஷ்யாவுக்கும் அதன் பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த எங்கள் கூட்டாளிகள் தயாராக உள்ளனர்.
600 மில்லியன் மதிப்பிலான அதிநவீன ஆயுதங்களை உக்ரைனுக்கு ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளேன்.
உக்ரைனுக்குள் நுழைய, ரஷ்ய படைகள் உண்மையான விளைவுகளையும் மிகப்பெரிய மனித உயிரிழப்புகளை விலையாக கொடுக்க நேரிடும்.
உக்ரைன் எல்லை நோக்கி ரஷ்யா மேலும் முன்னேறி செல்லும் பட்சத்தில் ரஸ்ய அதிபர், தான் இதுவரை கண்டிராத பொருளாதார தடைகளை பார்க்க நேரிடும் என்று கூறினார்.