
சீனாவுக்கு எதிரான வரி உடனடியாக அமுலுக்கு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். தமது உத்தியோகபூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் இதனைப் பதிவிட்டுள்ள அவர், எதிர்காலத்தில் சீனாஇ அமெரிக்காவின் நிலைப்பாடு ஏற்றுக் கொள்ளத்தக்கவை என்று உணரும் எனத் தாம் நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உலகளாவிய வீழ்ச்சியின் காரணமாக தங்களின் கொள்கையில் மாற்றம் ஏற்படவில்லை என அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்கொட் பெசென்ட் தெரிவித்துள்ளார். எனினும் ஜனநாயக கட்சியின் மூத்த உறுப்பினராக (ச்) சக் ஷூமர், அமெரிக்க ஜனாதிபதி பின்வாங்குவதாக விமர்சித்துள்ளார்.
அதேநேரம், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக போர் தீவிரமடையும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மோசமடைவதால் அந்த நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் 80 சதவீதம் வரை வீழ்ச்சியடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது உலக வர்த்தக அமைப்பின் கண்காணிப்பிற்கமைய, 466 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வீழ்ச்சியாகும். அமெரிக்காவின் வரி தொடர்பில் கருத்துரைத்துள்ள சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், சீனா மீது துஷ்பிரயோகம் செய்யும் வகையில் அமெரிக்கா வரிகளை விதிப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.