அமெரிக்காவிற்கும் யுக்ரைனுக்கும் இடையில் நடைபெற இருக்கும் பேச்சுவார்த்தை அர்த்தமுள்ள சந்திப்பாக இருக்கும் என யுக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
யுக்ரைன்-ரஷ்யா போர் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் அடுத்த வாரம் சவுதி அரேபியாவில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தை அர்த்தமுள்ளதாக இருக்கும் எனத் தான் நம்புவதாக வோலோடிமிர் செலென்ஸ்கி ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
யுக்ரைன் ஜனாதிபதிக்கும் அமெரிக்க ஜனாதிபதிக்கும் இடையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற சந்திப்பு வாக்கு வாதத்தில் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.