அமெரிக்காவில் விமான விபத்து – நால்வர் பலி

0
7

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணம் மெனோமொனி நகரிலிருந்து இல்லியான்ஸ் மாகாணத்திற்கு பயணித்த சிசா 180 என்ற சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்தனர். நேற்று காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இல்லியான்ஸ் மாகாணத்தின் டிரில்லா நகரில் விமானம் தரையிறங்குவதற்காக தாழ்வாகப் பறந்துகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக வீதியோரம் அமைக்கப்பட்டிருந்த மின் கம்பி மீது விமானம் மோதியுள்ளது. இதையடுத்து கட்டுப்பாட்டை இழந்த விமானம் வீதியோர வயல்பகுதியில் மோதி வெடித்து சிதறியது.

இவ்விபத்தில் விமானத்தில் பயணித்த 2 பெண்கள் உட்பட நால்வர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அந்நாட்டு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.