ஈரான் அமெரிக்காவுடன் புதிய உறவை ஏற்படுத்த விரும்புவதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் சாரீஃப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் சாரீஃப் கூறும்போது, “தோல்வியுற்ற ட்ரம்ப்பின் நிர்வாகக் கொள்கைகளைப் பயன்படுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விரும்பவில்லை. அதனால் அமெரிக்காவுக்கு வாய்ப்பு உள்ளது. நாங்கள் அமெரிக்காவுடன் புதிய உறவை ஏற்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்” என்றார்.
சில நாட்களுக்கு முன்னர், அனைத்து விதிமுறைக் கட்டுப்பாடுகளுக்கும் ஈரான் ஒப்புக்கொண்டால் அணு ஆயுத ஒப்பத்தத்தில் இணைவதில் அமெரிக்கா தயாராக இருக்கிறது என்பதில் ஜோ பைடன் தெளிவாக இருக்கிறார் என்றும், ஈரானுடனான எங்களது உறவை மேம்படுத்தும் வாய்ப்பாக இதனைக் கருதுவோம் என்றும் ஜோ பைடன் நிர்வாகம் தெரிவித்தது.