அம்பாறை அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்த இல்லத்திற்கு நேற்று மாலை வருகை தந்த சொர்ணம் குழுமத்தினர் ஒரு தொகை உணவுப்பொருட்களை கையளித்ததுடன்
மாணவர்களுக்கு தேவையான புத்தகப் பைகளையும் வழங்கினர்.
இல்லத்திற்கு வருகை தந்த சொர்ணம் குழுமத்தின் தலைவர் விஸ்வநாதன் உள்ளிட்டவர்களை இல்லத்தின் ஸ்தாபகர் த.கயிலாயபிள்ளை தலைமையிலான
உறுப்பினர்கள் இணைந்து வரவேற்றனர்.
இல்ல இயக்குனர் சபையின் வேண்டுகோளுக்கு அமைய வழிபாட்டு மண்டபம் முழுவதிற்குமான மாபிள் பதிக்கும் வேலையினையும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இல்ல மாணவர்களுடன் நட்புறவுடன் உரையாடியதுடன் அவர்களது தேவைகள்
தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டனர். எதிர்காலத்திலும் இல்லத்திற்கு தங்களால் உதவிகள் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.