அம்பாறை ஆலையடிவேம்பில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட க.கோடீஸ்வரனிற்குக் கௌரவிப்பு

0
62

அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில், இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில், நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட
கவீந்திரன் கோடீஸ்வரன் கௌரவிக்கப்பட்டார்.

ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தின் தலைவர் பி.தணிகாசலம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், தமிழ் மக்களின் இருப்பை பாதுகாக்கும் செயற்பாட்டில் ஈடுபடவேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினரிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மன்றத்தின் சிரேஸ்ட தலைவர் வே.சந்திரசேகரம் உள்ளிட்ட நிர்வாகத்தினர் மன்ற உறுப்பினர்கள் என பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.