அம்பாறை கஞ்சிகுடியாறு மற்றும் றுபஸ் நீர்பாசனத்தின் கீழ் 3,475 ஏக்கரில் நெற்செய்கை!

0
114

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடியாறு மற்றும் றுபஸ் குளங்களின் நீர்ப்பாசனத்தின் கீழ் பத்து விவசாயக் கண்டங்களை உள்ளடக்கியதாக
சுமார் 3ஆயிரத்து 475 ஏக்கர் சிறுபோக நெற் செய்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருக்கோவில் பிரதேசத்திற்கான சிறுபோக விவசாய ஆரம்பக் கூட்டம் திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் திருக்கோவில் பிரதேச
செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கஞ்சிகுடியாறு குள நீர்ப்பாசனத்தின் கீழ் ஆயிரத்து 700 ஏக்கரும், வடிச்சலின் ஊடாக 600 ஏக்கருமாக 2ஆயிரத்து 600 ஏக்கரும், றுபஸ் குள நீர்ப்பாசனத்தின் கீழ் 875 ஏக்கருமாக மொத்தமாக 2ஆயிரத்து 875 ஏக்கர் நெற் செய்கைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை வடிச்சலின் ஊடாக நெற் செய்கைப் பண்ணப்படும் ஏக்கர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லையென்பதுடன் விவசாயிகளின் தற்துணிவில்
முன்னெடுக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இச் சிறுபோக விவசாய ஆரம்ப கூட்டத்தில் திருக்கோவில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.நிருபா, கிழக்கு மாகாணம் தம்பிலுவில் நீர்ப்பாசனப் பொறியியலாளர்
ஏ.ராஜேஸ்கண்ணா, தம்பிலுவில் கமநல சேவைகள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் கிராம சேவையாளர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஏ.கந்தசாமி மற்றம் திருக்கோவில்
பிரதேச விவசாயிகளும் கலந்து கொண்டனர்.