27.8 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

அம்பாறை கல்முனையில் அவசர உயிர் காப்பு செயன்முறை பயிற்சி

அம்பாறை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் அனுசரணையில், பாடசாலை மாணவர்களுக்கான ‘அவசர உயிர் காப்பு’ செயன்முறை பயிற்சி பட்டறை, வைத்தியசாலையின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
உலக இதய மீள் உயிர்ப்பித்தல் தினத்தினையிட்டு இலங்கையின் அதி தீவிர சிகிச்சை மற்றும் மயக்க மருந்து வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில், செயன்முறை பயிற்சி
பட்டறை நடைபெற்றது.
கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி இரா.முரளீஸ்வரனின் வழிகாட்டலில், பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு உயிர் காப்பு செயன்முறை பயிற்சி
வழங்கப்பட்டு வருகிறது.
இங்கு நடைபெற்ற இப் பயிற்சி பட்டறையில் கல்முனை உவெஸ்லி உயர்தர தேசிய பாடசாலை மற்றும் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இம் மாணவர்களுக்கான செயன்முறை விளக்கங்களினை மயக்க மருந்து வைத்திய நிபுணர் டாக்டர்.கே. சுதேஸ்வரி தலைமையிலான வைத்திய உத்தியோகத்தர்கள் குழுவினர் இணைந்து செயற்கை மனித உடல் மாதிரிகளை பயன்படுத்தி இச் செய்முறை விளக்கங்கள், ஆலோசனைகளை மாணவர்களுக்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles