அம்பாறை கல்முனையில், மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நபர் ஒருவர் மீது தாக்குதல்!

0
205

அம்பாறை கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில், இன்று காலை மோட்டார் சைக்கிளில் பயணித்த
நபர் ஒருவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது.

மற்றொரு மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் கூரிய ஆயுதத்தினால் வெட்டி காயப்படுத்தி விட்டு தப்பி சென்ற நிலையில், சம்பவத்தில் 41 வயது மதிக்கத்தக்க
இஸ்மாலெப்பை சிறாஜ்டீன் என்ற குடும்பஸ்தரே காயமடைந்துள்ள நிலையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில், கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.