அம்பாறை சாய்ந்தமருதில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு வர்த்தக சந்தை

0
131

அம்பாறை சாய்ந்தமருதில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு பிரதேச செயலகம் மற்றும் சமூர்த்தித்திணைக்களம் இணைந்து வர்த்தக சந்தையை ஒழுங்குபடுத்தியிருந்தன.

கிராமப்புறங்களிலுள்ள உற்பத்தியாளர்களின் மூலிகை சவர்க்காரம் மற்றும் கைப்பணிப் பொருட்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.
வர்த்தகச்சந்தை சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஸிக் தலைமையில் இடம் பெற்றதுடன், பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்
வி.ஜெயந்த நாயக்க கலந்துகொண்டார்.

உதவி அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன், சமூர்த்தி மாவட்டப்பணிப்பாளர் சப்றாஸட, முகாமையாளர் ஏ.சி.எம்.நஜீம், அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.