அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலகத்தில் உளவளத்துணை செயலமர்வு

0
171

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பணிபுரியும் சகல உத்தியோகத்தர்களுக்குமான உளவளத்துணை ஒரு நாள் செயலமர்வு சிறப்பாக இடம்பெற்றது.
திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின் ஆலோசனைக்கு அமைவாக திருக்கோவில் பிரதேச செயலக உளவளத்துணை அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஆப்தீனின் ஒழுங்கமைப்பில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் செயலமர்வு இடம்பெற்றது.
குடும்ப உறவும் உளநல ஆரோக்கியமும் எனும் தொனிப் பொருளில் செயலமர்வு இடம்பெற்றதுடன், வளவாளராக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பாலியல் தொற்று நோய் பிரிவின் வைத்திய அதிகாரி எம்.என்.எம்.டில்சான் கலந்து கொண்டு உளவளத்துணை தொடர்பான தெளிவூட்டல் கருத்துக்களை வழங்கி இருந்தார்.