அம்பாறை பாண்டிருப்பு கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் இலவச அரிசி

0
166

அம்பாறை பாண்டிருப்பு கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் வறுமைக்கோட்டிற்குட்பட்டவர்களுக்கான அரிசி வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.


முதற்கட்டமாக 300 பேருக்கு இலவச அரிசி வழங்கப்பட்டதுடன், தெரிவு செய்யப்பட்ட ஏனையோருக்கு பிரதேச சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் வழங்கப்பட்டுவருகின்றன.


அரிசி வழங்கும் சம்பிரதாய நிகழ்வில், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், கல்முனை வடக்கு கிராமசேவை நிர்வாக உத்தியோகத்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.