அம்பாறை மாவடிப்பள்ளியில், பெண் தலைமைக் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன

0
64

அம்பாறை மாவடிப்பள்ளி கிழக்கு மற்றும் மேற்கு கிராம சேவகர் பிரிவுகளில் பொருளாதார ரீதியாக பின் தங்கிய, பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் மற்றும் சுய தொழில் புரிகின்ற குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

மாவடிப்பள்ளி மொழி அபிவிருத்தி மற்றும் சக வாழ்வு சங்கத்தினர் அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பிடம் வேண்டிக் கொண்டதற்கிணங்க
16 குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்த, உதவிகள் வழங்கப்பட்டன.
மாவடிப்பள்ளி மொழி அபிவிருத்தி மற்றும் சக வாழ்வு சங்கத்தின் தலைவர் இசட்.எம்.நஸ்கான் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் தலைவி டி.வாணி பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.