அம்பாறை மாவட்டத்தில் முதலைகளின் நடமாட்டம் அதிகரிப்பு

0
104

அம்பாறையில் நீர்நிலைகளில் காணப்படும் முதலைகள், குடியிருப்புகளுக்குள் நுழைவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.கிட்டங்கி, மாவடிப்பள்ளி, சின்ன முகத்துவாரம், கச்சி குடிச்சாறு போன்ற இடங்களிலேயே முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.


வேளாண்மை செய்கை அறுவடை ஆரம்பமாகி உள்ளதனால் வயல் நிலங்கள், கால்வாய்களை அண்டிய பகுதிகளில் புல் மேயும் எருமைமாடுகள் முதலைகளுக்கு இரையாவதாக தெரிவிக்கப்படுகிறது.


முதலைகளின் நடமாட்டம் தொடர்பில் எச்சரிக்கை பலகைகள் இன்மையால் இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.