அரச ஊழியர்களுக்கான வெள்ளிக்கிழமை விடுமுறை இரத்து!

0
163

எரிபொருள் பிரச்சினைகள் காரணமாக அரசாங்க ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் வழங்கப்பட்ட விசேட விடுமுறை இரத்துச் செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்குவதற்கான சுற்றறிக்கையை இரத்துச் செய்வதற்கான அங்கிகாரத்தை அமைச்சரவை நேற்று வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போதே, அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு விடுமுறை இரத்துச் செய்யப்பட்டமை தொடர்பில், அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.