அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு அரசியலாக்கப்படக் கூடாது

0
162

நாட்டின் நலனுக்காக அரச மற்றும் தனியார் துறை ஆகிய இரண்டும் மறுசீரமைக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ‘தற்போதைய சவால்களுக்கு மத்தியில் அரச துறையை மாற்றியமைக்க வேண்டும். அத்தோடு தனியார் மற்றும் அரசாங்க ஊழியர்களுக்கும் பணி பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை இருக்க வேண்டும். பணிப் பாதுகாப்பு மற்றும் ஓய்வு பெற்ற பின்னரும் கிடைக்கும் வருமானம் காரணமாக பலர் அரச சேவையில் இணைவதற்கு ஆர்வமாக உள்ளனர். அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு நிலையான வருமானத்தை உறுதிப்படுத்தும் பல கொள்கைகளை ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார். அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு அரசியலாக்கப்படக் கூடாது. அனைவருக்கும் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் தீர்மானங்களை எடுக்க வேண்டும்.’