அரச வீழ்ச்சிக்கு இடமளிக்க முடியாது- பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில்

0
150

அரச வீழ்ச்சிக்கு இடமளிக்கக்கூடாது என்பதை கருத்திற்கொண்டே தேசிய சுதந்திர முன்னணியானது அவரகாலசட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தது என்று பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவசரகால சட்டத்தை நிறைவேற்றிக்கொள்வதற்காக தேசிய சுதந்திர முன்னணி பாராளுமன்றத்தில் ஆதரவாக வாக்களித்தது. இதற்கூடாக தேசிய சுதந்திர முன்னணி அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்படுகின்றதா எதிராக செயற்படுகின்றதா என்ற கேள்வி பலரது மத்தியில் எழுந்தது.

அவ்வாறு ஒடுக்குமுறைக்கு ஆதரவாக செயற்படுகின்றதா என்ற கேள்வியும் எழுந்தது.

இங்கு நாம் ஒரு விடயத்தை குறிப்பிட்டுக்கூற வேண்டும் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டுமா அல்லது ஸ்திரமான அரசு கட்டியெழுப்பப்பட வேண்டுமா என்பதே இவ்விடத்தில் முக்கியமானது.

எமது தீர்மானம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததாலும் தீர்மானமிக்க ஒருநிலைமைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது என்பதை சகலரும் புரிந்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும் என்றார்.