அரிசி விலையில் திடீர் மாற்றம்!- விவசாய அமைச்சு அறிவிப்பு

0
541

அரிசி விலைகளில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி நாட்டரிசி ஒரு கிலோ 97 ரூபாய்க்கும், வெள்ளை மற்றும் சிவப்பு அரிசி ஒரு கிலோ 95 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதியிலிருந்து குறித்த விலை அமுல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ச.தொ.ச. மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மற்றும் சுப்பர் மார்க்கெட்டுக்களில் மேற்படி விலைகளில் அரிசியைக் கொள்வனவு செய்யமுடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.