அரிய வகை வலம்புரிச் சங்கு, சிப்பிகளுடன் இருவர் கைது !

0
34

அநுராதபுரம், ரம்பேவ பிரதேசத்தில் அரிய வகை வலம்புரிச் சங்கு மற்றும் இரண்டு சிப்பிகளை 10 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்ற இரண்டு சந்தேக நபர்கள் இன்று திங்கட்கிழமை (16) கைது செய்யப்பட்டுயள்ளதாக மீரிகம விமானப்படை புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் அநுராதபுரத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் பணிபுரியும் பூசாரிகள் ஆவர். 

இரு சந்தேக நபர்கள் அரிய வகை வலம்புரிச் சங்கு மற்றும் சிப்பிகளை விற்பனை செய்ய முயல்வதாக மீரிகம விமானப்படை புலனாய்வு பிரிவினருக்குக் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, மீரிகம விமானப்படை புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் சிலர் இந்த விலையுயர்ந்த பொருட்களை கொள்வனவு செய்யும் போர்வையில் சந்தேக நபர்களுடன் தொடர்புகளை பேணி அவர்களை கைது செய்துள்ளனர்.