அருகில் உள்ள துணை மின்நிலையத்தில் தீ – உலகின் மிகவும் மும்முரமான ஹீத்ரோ விமானநிலையம் மூடப்பட்டது.

0
28

லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு மின்சாரத்தை வழங்கும் அதன் அருகில் உள்ள துணை மின்நிலையத்தில்  ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

உலகின் மிக மும்முரமான விமானநிலையமாக வர்ணிக்கப்படும் ஹீத்ரோ விமானநிலையம்; அடுத்த சில நாட்களில் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை எதிர்கொள்ளக்கூடும் என தெரிவித்துள்ள அதிகாரிகள் விமானநிலையம் மீண்டும் திறக்கப்படும் வரை எந்த காரணம் கொண்டும் பயணிகளை அங்கு செல்லவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேற்கு லண்டனில் உள்ள விமானநிலையத்தில் இன்று மாத்திரம் 1351 விமானங்களின் பயணம் நிறுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹெய்ஸ் என்ற பகுதியில் உள்ள துணை மின்நிலையத்தில் மூண்ட தீ காரணமாக 16300 வீடுகளிற்கான மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும்  150 பேர் வரை பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது