அலி சப்ரி ரஹீம், பிணையில் விடுவிப்பு!

0
68

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கட்டடம் ஒன்றுக்குள் அத்துமீறிப் பிரவேசித்த குற்றச்சாட்டில், அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய, இன்று கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் சட்டத்தரணியுடன் சரணடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கைது செய்யப்பட்டு, புத்தளம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அதனையடுத்து, அவரை இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுதலை செய்ய, புத்தளம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.